"கேம் சேஞ்சர்".. கமல்ஹாசன் முடிவால் மொத்தமாக மாற போகும் ஆட்டம்.. அந்த 2 கட்சிக்குத்தான் சிக்கலாமே!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலிலும் கூட மக்கள் நீதி மய்யம் பிரதான கட்சிகளுடன் இணையாமல் தனியாக போட்டியிட்டது.
இந்த தேர்தலுக்கு பின் திமுக, காங்கிரஸ் தலைவர்களுடன் கமல்ஹாசன் அதிகம் நெருக்கம் காட்டி வருகிறார். முக்கியமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக கமல்ஹாசன் பழகி வருகிறார்.

நெருக்கம்
விக்ரம் படத்தை வெளியிட்டது, அதன்பின் கமலின் பல படங்களுடன் ஒப்பந்தம் செய்தது, இந்தியன் 2 படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பிற்குள் வந்தது என்று உதயநிதி - கமல் நெருக்கமாகி உள்ளனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனும் கமல்ஹாசன் நெருக்கமாகி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்பார்கள். நான் ஒரு இந்தியனாக இங்கே இருக்கிறேன். என் அப்பா ஒரு காங்கிரஸ் நிர்வாகி. எனக்கு பல்வேறு அரசியல் கொள்கைகள் இருந்துள்ளன. நான் தனியாக கட்சி நடத்தி வருகிறேன்.

கொள்கை
ஆனால் என்னுடைய நாடு என்று வரும் போது, கட்சி கோடுகள், எல்லைகள் எல்லாம் மறைந்துவிடும். நான் அந்த வேறுபாடுகளை மறந்துவிட்டு இங்கே வந்து இருக்கிறேன், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைய உள்ளதோ என்ற கேள்வி எழுந்தது. பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின்பாக ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். இவர்கள் இருவரும் மேற்கொண்ட ஆலோசனையில் பாஜகவிற்கு எதிரான கடுமையான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் அன்பு, கொலை, பரிவு போன்ற விஷயங்களும் தீவிரமாக விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. கட்சி தலைவர் கமல் தலைமையில், இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கலந்து கொண்டதற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கமலஹாசனை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி
இதில் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனைகள் செய்யப்பட்டு காங்கிரசுடன் கூட்டணி வைக்க கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இடைத்தேர்தல்
இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இப்போது கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக இருப்பதால் இரண்டு விதமான நிலைப்பாடுகளை அவர் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு நேரடியாக ஆதரவு கொடுப்பது. அப்படி செய்யும் பட்சத்தில் அது காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு பெரிய அளவில் உதவும். அதிமுக - பாஜக கட்சிகளுக்கு இது பெரிய பின்னடைவை கொடுக்கும்., ஏனென்றால் கமல்ஹாசனுக்கு கொங்கு மண்டலத்தில் நல்ல வரவேற்பும் 2-3 சதவிகிதம் வாக்கு வங்கியும் உள்ளது. இது காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிதாக உதவும். முக்கியமாக கொங்கு வேளாள கவுண்டர்களின் கணிசமான வாக்குகள் கமல்ஹாசன் பக்கம் செல்லவும் வாய்ப்புகள் உள்ளன.

திமுக
இன்னொரு பக்கம் அதிமுக, பாஜகவிற்கு இது பெரிய பின்னடைவை கொடுக்கும். கடந்த தேர்தலில் கூட்டணி இன்றியே அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக வேட்பாளர் வானதிக்கு கோவை தெற்கில் கமல்ஹாசன் கடும் போட்டியாக இருந்தார். அப்படி இருக்க காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்தால் காங்கிரஸ் - திமுக இங்கு வெற்றிபெறுவது மிக எளிதாகிவிடும். இன்னொரு பக்கம் கமல்ஹாசன் யாருக்கும் ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதற்கு வாய்ப்பு குறைவு. ஏனென்றால் 2024 லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் - திமுக கூட்டணியில் மநீம இணைய வாய்ப்பு உள்ளதாக வரும் தகவல்களால் இந்த தேர்தலிலேயே அந்த கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தரவும் வாய்ப்புகள் உள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications