"அருந்ததியினர்.." சர்ச்சையை கிளப்பிய சீமான் பேச்சு.. ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த நாம் தமிழர்

ஈரோடு தேர்தலில் சீமான் பேச்சு உள்ளிட்ட பல காரணங்களால் நாம் தமிழர் வாக்குகள் கடுமையாகச் சரிந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு தேர்தலில் சீமான் பேச்சு உள்ளிட்ட பல காரணங்களால் நாம் தமிழர் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது

இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் கூட, மக்களிடையே கவனம் ஈர்த்தது என்னவோ, ஒரு சில வேட்பாளர்கள் தான். வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

 வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.. இதை திமுக ஒரு கவுரவ பிரச்சினையாகக் கருதுவதால் காங். வேட்பாளருக்காக முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் பல்வேறு தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கினர். இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்பதே அவர்களின் குறி. அதேபோல அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்குகிறார். ஓபிஎஸ் தரப்பு மற்றும் அமமுக இருவரும் வேட்பாளர்களை வாபஸ் பெற்ற நிலையில், அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கினார்.

 நாம் தமிழர்

நாம் தமிழர்

இதில் நாம் தமிழர் கட்சி வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது. அங்கிருந்து மேனகா போட்டியிடுகிறார். கடந்த மக்களவை, சட்டசபைத் தேர்தல் என ஒவ்வொரு தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்து வந்த நிலையில், இந்த தேர்தலில் வாக்கு வங்கியை மேலும் அதிகரிக்கவே நாம் தமிழர் முயன்றது. இது அடுத்து வரும் தேர்தல்களில் தம்பிகளுக்கு உற்சாகம் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்தபடி வாக்குகள் அதிகரிக்கவில்லை. அக்கட்சியின் வேட்பாளர் மேனகா சுமார் 8400 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

 சீமான் சர்ச்சை பேச்சு

சீமான் சர்ச்சை பேச்சு

இதற்குச் சீமானின் சர்ச்சை கருத்துகளும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இதில் தேர்தல் பிரசாரம் சமயத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு சர்ச்சையானது. அந்த கூட்டத்தில் பேசிய சீமான், "முதலியார்கள் யார் என தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.. சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் பட்டாடை நெய்து கொடுத்தவர்களே முதலியார் ஜாதியினர். விஜயநகரப் பேரரசு ஆட்சியில் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளைக் கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள்" என்று பேசியிருந்தார்.

 கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

அதாவது ஆந்திரா மாநிலத்தில் இருந்து வந்தவர்களே அருந்ததியர்கள் என்பது போல சீமான் கூறியிருந்தது.. மிக பெரியளவில் சர்ச்சையானது. சீமான் பேச்சுக்கு மாநிலம் முழுக்க எதிர்ப்பு எழுந்தது.. தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் சீமான் கொடும்பாவி கொளுத்தப்பட்டது.. மேலும், ஈரோடு கிழக்கிலும் நாம் தமிழர் வேட்பாளர் பிரசாரம் செய்யவிடாமல் மோதல்கள் நடந்தன. இவை மட்டுமின்றி, கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாகச் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் மற்ற கட்சியினர் பிரசாரம் செய்யும் இடங்களில் சீமான் பிரசாரம் செய்யவும் தடை விதித்தது.

 மறுப்பு இல்லை

மறுப்பு இல்லை

மேலும், இது தொடர்பாக விளக்கமளிக்கவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், சீமான் கடைசி வரை தனது பேச்சுக்கு மறுப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. கடைசி வரை தனது கருத்தில் உறுதியாகவே இருந்தார். வரலாற்றில் நடந்ததை மட்டுமே தான் பேசியுள்ளதாகவும் இதற்காக மன்னிப்பெல்லாம் கேட்கப் போவதில்லை என்றே அவர் தொடர்ந்து கூறி வந்தார்.

 பாதிக்குமா

பாதிக்குமா

சீமானின் இந்த சர்ச்சை இடைத்தேர்தல் முடிவுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் அவர்களின் வாக்கு எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்த நிலையில், சீமானின் பேச்சு வாக்கு வங்கியைக் குறைக்கலாம் என்று கூறப்பட்டது. அதேநேரம் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நாம் தமிழர் ஆதரவாளர்கள் கூறினர். இருப்பினும், சீமான் பேச்சு உள்ளிட்ட பல காரணங்கள் நாம் தமிழரின் வாக்கு வங்கியைக் கணிசமாகக் குறைத்தே உள்ளது.

டெபாசிட் இழந்தது

டெபாசிட் இழந்தது

சீமானின் இந்த சர்ச்சை இடைத்தேர்தல் முடிவுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் அவர்களின் வாக்கு எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வந்த நிலையில், சீமானின் பேச்சு வாக்கு வங்கியைக் குறைக்கலாம் என்று கூறப்பட்டது. அதேநேரம் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நாம் தமிழர் ஆதரவாளர்கள் கூறினர். இருப்பினும், சீமான் பேச்சு உள்ளிட்ட பல காரணங்கள் நாம் தமிழரின் வாக்கு வங்கியைக் கணிசமாகக் குறைத்து டெபாசிட்டையே இழந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+