பாஜக போடும் "கண்டிஷன்".. கேட்கலைன்னா.. அதிமுக சின்னமே முடங்கும்? அச்சச்சோ.. அதிரும் ஈரோடு கிழக்கு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக அதிமுக கூட்டணி உருவாகாத பட்சத்தில் அதிமுகவின் இரட்டை இலை சின்னமே முடக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆலோசகர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். அதிமுக தரப்பிலும் இந்த விஷயம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன்.
இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார் உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

தேர்தல் ஆணையம்
இவரின் மரணம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகி உள்ளது. இந்த தொகுதி காலியாகிவிட்டதாக இன்னும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. பெரும்பாலும் ஒரு வாரத்திற்குள் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த அறிவிப்பு வந்த தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடக்கும். தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சாஹுவும் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதை உறுதி செய்துள்ளார். காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் தேர்தல் நடக்கும் என்று அறிவித்து உள்ளார். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் எதுவும் அடுத்த 6 மாதங்களுக்குள் நடக்க வாய்ப்பு இல்லை.

தொகுதி
அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கும் அதே சமயத்தில் இங்கு தேர்தல் நடக்க வாய்ப்புகள் உள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் பாதியில் நடக்கும். அதே மாதத்தில் இங்கே இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார்.

இடைத்தேர்தல்
அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார். இந்த தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணி போட்டியிட்டதால் இந்த முறையும் அதிமுக கூட்டணியில் உள்ளே கட்சிகள் இந்த இடத்தில் போட்டியிட முயன்று வருகிறதாம். தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு குறைவு என்பதால்.. பாஜக சார்பாக வேட்பாளரை களமிறக்க பாஜக முயன்று வருகிறதாம். அதாவது அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக ஒரு வேட்பாளரை இங்கே களமிறக்க பாஜக அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை கூட்டணி வேட்பாளரைத்தானே களமிறக்கினீர்கள்.. இந்த முறையும் அப்படியே கூட்டணி கட்சியை களமிறக்குங்கள். எதிரில் திமுக போட்டியிட வாய்ப்பு இல்லை, காங்கிரஸ்தான் போட்டியிடும்.

பாஜக
அதனால் அதிமுக கூட்டணியில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று அதிமுகவிற்கு பாஜக பிரஷர் கொடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதை ஒருவேளை அதிமுக கேட்கவில்லை என்றால்.. பாஜக தனியாக கூட நிற்கும். கொங்கில் தனது பவரை காட்டுவதற்காக ஈரோடு கிழக்கில் பாஜக தனியாக நிற்கும். இன்னொரு பக்கம் டெல்லி மூலமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் பாஜக பிரஷர் கொடுக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதாவது எடப்பாடி - ஓபிஎஸ் மோதலால் இரட்டை இலை சின்னத்தை முடக்கினால், இரண்டு பேருக்கும் புதிய சின்னங்கள் கொடுக்கப்பட்டு இடைத்தேர்தலில் இரண்டு புதிய சின்னங்கள் போட்டியிடும். அப்போது பாஜக தாமரை சின்னத்தில் தனியாக போட்டியிட்டால் அவர்களுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும். இதனால் பாஜக வேட்பாளரை இறக்க சம்மதிக்கவில்லை என்றால் அதிமுக சின்னத்தை முடக்குவதற்கான வேலைகளை டெல்லி பார்க்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கூட்டணி மோதல்
அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் தற்போது லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுடன் பாஜகவிற்கு நிறைய உரசல் உள்ளது. பாஜகவை கழற்றிவிடும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகவும் கூட செய்திகள் வருகின்றன. சமீபத்தில் சிவி சண்முகம் கூட பாஜக - திமுக கூட்டணி வைக்க போவதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பாஜக - அதிமுக கூட்டணி முற்றாக முறிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு கொங்கு மண்டலத்தில் நாங்கள்தான் பெரிய கட்சி என்று நிரூபிக்க பாஜக முயன்று வருகிறது. இதனால் பாஜக தன்னுடைய பலத்தை சோதிக்க, லோக்சபா தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தேர்தலில் தனித்து நிற்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் நேரத்தில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications