கணவருக்கு மது வாங்கி கொடுத்து 5 முறை சிதைத்தான்.. ஈரோடு எஸ்பியிடம் கண்ணீர் விட்ட பெண்
Recommended Video
ஈரோடு: தன் கணவருக்கு மது வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி, ராதாகிருஷ்ணன் என்பவன், தன்னை ஐந்து முறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈரோடு எஸ்பியிடம் இளம் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா( உண்மையான பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது கணவரை மதுபழக்கத்துக்கு அடிமையாக்கி ராதாகிருஷ்ணன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துளளார்.அவர் அளித்த புகார் மனுவில், எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அவருக்கு மதுக்கடையில் ராதாகிருஷ்ணன் என்பவர் அறிமுகம் ஆனார்.

அவர் எனது கணவருக்கு மது வாங்கி கொடுத்து தொடர்ந்து நட்பு பாராட்டி வந்தார். இதனால் என் கணவர் ஒருநாள் அவரை என் வீட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.அதன் பிறகு என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வந்தது. இதனால் நான் தற்கொலை செய்ய முடிவு செய்து அதற்கும் சாணி பவுடரை குடித்து முயன்றேன். அப்போது மருத்துவமனைக்கு வந்து என்னை பார்த்த ராதாகிருஷ்ணன் எனக்கு ஆறுதல் கூறுவது போல் பேசி பணம் கொடுத்தார்.
அதன் பிறகு ஒருநாள் வீட்டுக்கு வந்து ராணி மாதிரி வைத்துக்கொள்வதாக கூறி எல்லை மீறினான். இப்படி ஐந்து முறை என்னிடம் எல்லை மீறினான். இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணனை பற்றிய உண்மை வெளியில் தெரிந்ததால் தைரியமாக புகார் கொடுக்க வந்துள்ளேன். என்னை காப்பாற்ற வேண்டும்" என கூறியுள்ளார்.
முன்னதாக ரியல் எஸ்டேட் பிரமுகர் ராதாகிருஷ்ணன் ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்தார். இப்போது புதிய புகாரையும் சேர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications