இதுக்கா ரைட் லெக்கை சுழற்றி.. டேபிளை உடைத்தார்? எடப்பாடி "அதை" செய்திருந்தால்.. தப்பித்திருக்கலாமே!
கடந்த முறை ஈரோட்டு கிழக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா அதிமுக சின்னத்தில் போட்டியிட்டார்.
ஈரோடு: மிகப்பெரிய அளவில் போராடி சின்னத்தை பெற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பின் அதிமுக தற்போது ஈரோடு கிழக்கில் படுதோல்வி அடையும் நிலையில் உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்தார்.
இதனால் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது.

அதிமுக கூட்டணி
2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார். அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் மட்டும் அதிகம் வாங்கி இவர் வெற்றிபெற்றார்.

நாம் தமிழர்
இந்த நிலையில்தான் கடந்த முறை இங்கு போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா இங்கு மீண்டும் போட்டியிடுவார். அதிமுக கூட்டணி சார்பாக அவர் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு பதிலாக தாங்களே நிற்கிறோம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் எடப்பாடி பேசினார். அதாவது அதிமுக சார்பாகவே வேட்பாளரை நிற்க வைக்கிறோம் என்று எடப்பாடி பேசினார். தமிழ் மாநில காங்கிரசின் ஜிகே வாசனிடம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக கோரிக்கை விடுவித்து வேட்பாளராக கே.எஸ் தென்னரசை அறிவித்தது.

சின்னம்
இதையடுத்து சின்னம் முடங்கும் நிலையில், சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி தரப்பு கோரிக்கை வைத்தது. அதோடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த வழக்கின் மூலம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் கேஎஸ் தென்னரசு அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆனார். பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் மூலம் கே.எஸ் தென்னரசு வேட்பாளர் ஆனார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

தோல்வி
ஆனால் இவ்வளவு போராடி சின்னத்தை பெற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக தற்போது ஈரோடு கிழக்கில் படுதோல்வி அடையும் நிலையில் உள்ளது. ஈரோடு கிழக்கில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46116 வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 16778 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 3061 வாக்குகளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேமுதிக வெறும் 1017 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் திமுக தரப்பு பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு தோல்வியை சந்திப்பதற்கு பதிலாக.. ஒற்றை தலைமை மீது சந்தேகம் ஏற்படுவதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கே அதிமுக கொடுத்திருக்கலாம். அப்படி கொடுத்து இருந்தால்.. எடப்பாடிக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்காது.. தேவையின்றி சின்னத்திற்காக சட்ட போராட்டமும் நடந்து இருக்காது.. இப்போது எடப்பாடி மீதான விமர்சனங்களும் வைக்கப்பட்டு இருக்காது.












Click it and Unblock the Notifications