காதலிப்பியா மாட்டியா.. கழுத்தில் கத்தியை வைத்த இளைஞன்.. பதறி போன சத்தியமங்கலம்
பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்
Recommended Video
சத்தியமங்கலம்: "என்னை லவ் பண்ண போறியா இல்லையா? என்று பெண்ணிடம் கத்தியை காட்டிய மிரட்டிய இளைஞனை போலீசார் உள்ளே தூக்கி உட்கார வைத்துவிட்டனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள பட்டரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் இவரை விரும்பி உள்ளார். இது நடந்து 2 வருஷமாகிறது.
ஆனால், குடும்ப சூழல் கருதி, அந்த பெண் சிவகுமாரிடம் பேசுவதை குறைத்து கொண்டு உள்ளார். இதை தாங்கி கொள்ள முடியாத சிவக்குமார் அடிக்கடி பெண்ணை சந்தித்து, திரும்பவும் தன்னை காதலிக்க வற்புறுத்தி உள்ளார்.

எச்சரிக்கை
அதற்கு பெண் மறுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் இனிமேல் தன்னை அடிக்கடி சந்தித்து டார்ச்சர் தர வேண்டாம் என்றும் பலமுறை எச்சரித்து சொல்லி உள்ளார்.

மிரட்டல்
இந்நிலையில், இன்று காலை சத்தியமங்கலம் - பண்ணாரி ரோட்டில் குளத்துப்பிரிவு பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக அந்த பெண் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த சிவகுமார் "என்னை இப்போ நீ என்னை லவ் பண்ண போறியா இல்லையா' என்று கேட்டார்.

கத்தி
அதற்கு அவர் மறுப்பு சொல்லவும், திடீரென பாக்கெட்டில் இருந்து கத்தியை எடுத்து மிரட்டி "இப்பவும் கேட்கிறேன்.. என்னை லவ் பண்ண போறியா இல்லையா.. லவ் பண்ணாவிட்டால், உன்னை கொன்னே போட்டுருவேன்" என்று மிரட்டி உள்ளார்.

கைது
இதை பார்த்த அங்கிருந்த மற்ற பொதுமக்கள், சிவக்குமாரை தடுத்து நிறுத்தி போலீசில் கொண்டு போய் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி லவ் டார்ச்சர் செய்து மிரட்டிய இந்த சம்பவம் சத்தியமங்கலத்தில் பரபரப்பை தந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications