For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது தான் மனிதாபிமானம்.. சாக்கடை மூடியில் சிக்கிய ‘குண்டு’ எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

சாக்கடை மூடியில் சிக்கிய எலியை தீயணைப்பு வீரர்கள் கஷ்டப்பட்டு காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் பாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்கு போராடிய உடல் பருமனான எலியை, பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜெர்மனியின் ஹெஸ்சி மாகாணத்தில் உள்ளது பென்ஷியம் நகர். சம்பவத்தன்று அங்குள்ள பாதாளச் சாக்கடை ஒன்றின் மூடியில், எலி ஒன்று சிக்கிக்கொண்டு, வெளியேற முடியாமல் தவித்ததை அப்பகுதியில் சென்றோர் கண்டுள்ளனர்.

fat rat stuck in manhole cover rescued by german firefighters

சற்று உடல் பருமனாக இருந்ததால், சாக்கடை மூடியின் துளை வழியே அந்த எலியால் வெளியே வர இயலவில்லை. இதனால் நேரம் செல்லச் செல்ல அந்த எலியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைக் கண்டு அப்பகுதி வழியேச் சென்ற விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர், அந்த எலியைக் காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் அவரால் அதனை வெளியில் எடுக்க முடியவில்லை.

Aslo Read | எப்ப டிவியில் என் படம் வந்தாலும் .. உடனே போனை போட்டு பாராட்டித் தள்ளிடுவாங்க.. அதிதி பாலன் ஹேப்பி
எனவே, இது தொடர்பாக அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர், பல மணி நேரம் போராடி அந்த எலியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

fat rat stuck in manhole cover rescued by german firefighters

எலி தானே என அலட்சியம் செய்யாமல், அதனையும் ஒரு உயிர் என மதித்து, பல மணி நேரம் போராடி அதனைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

English summary
A team of volunteer firefighters were called to the scene of an unusual emergency in the western German town of Bensheim-Auerbach on Sunday after an oversized rat was found wedged halfway through a manhole cover
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X