புதுச்சேரியில் பிப்.11 முதல் ஹெல்மெட் கட்டாயம்.. நாராயணசாமியின் பேச்சை புறம்தள்ளிய டிஜிபி
புதுச்சேரி:புதுச்சேரியில் வரும் 11ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அம்மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்ந ஆண்டு மே மாதம் கட்டாய ஹெல்மெட் சட்டம் நடைமுறைப்பட்டது.பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஹெல்மெட் அணியலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் ஹெல்மெட் அணியாதவர்கள் அதிகம் என்பதால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டுமென்பதில் ஆளுநர் கிரண்பேடி தீவிரம் காட்டி வருகிறார்.

மோதல் முற்றுகிறது
இந்த விவகாரத்தில் கிரண்பேடிக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனிடையே காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களை டிஜிபி சுந்தரி நந்தா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

322 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் மொத்தம் 322 பேர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழிந்துள்ளனர். அதனை தடுக்கும் பொருட்டு புதுச்சேரி மாநிலத்தில் வரும் 11ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பறிமுதல்
அதனை மீறுபவர்கள் மீது முதல்முறை 100 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 300 ரூபாய் அபராதமும், மூன்றாவது முறையும் விதிகளை மீறுபவர்களுக்கு 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும். இதே போல் கார்களில் செல்பவர்களும் வரும் திங்கட்கிழமை முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்து.

காவல்துறைக்கு அபராதம்
மீறுபவர்கள் மீது ஹெல்மெட்டிற்கு விதிக்கப்படும் அபராதங்களே விதிக்கப் படும். அதேபோல் ஹெல்மெட் அணியாத போலீசாருக்கும் அபராதம் விதிக்கப் படும் என்று அவர் கூறினார்.
|
கடமை உள்ளது
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. அறிவுரை மட்டுமே கூற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை தமக்கு உள்ளது. மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை. அதை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த நடடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications