உயிருக்கு போராடும் 4 வயது சிறுமி.. இதய நோயால் பாதிப்பு.. உடனே உதவுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் 4 வயது சிறுமி தருணிகாவின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள்!

தருணிகாவிற்கு 4 வயதுதான் ஆகிறது. குட்டியாக, சந்தோசமாக வலம் வந்து கொண்டு இருந்த தருணிகா அரசு பிரைமரி பள்ளியில் யுகேஜி படித்து வருகிறாள். பாவம் துறுதுறு என்று விளையாடிக் கொண்டு இருந்த தருணிகா கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

தருணிகாவின் இதய வால்வுகளில் இருக்கும் பிரச்சனைதான் அவர் சிகிச்சை பெற காரணம். ஆம் தருணிகாவின் இதயத்தில் உள்ள வால்வுகளில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் Complex Congenital Heart Disease (Univentricular Heart, Hypoplastic LV, DORV, Common AV Valve, S/p Bidirectional Glenn) என்று பெயர். இதை கடந்த சில மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவர்கள் சரி செய்து வருகிறார்கள்.

Help 4 year old Tharunika recover from Heart problem

இதுதான் அவரின் சிகிச்சை கடைசி கட்டம் ஆகும். இந்த கடைசி சிகிச்சையை செய்தால் அவர் குணமாகிவிடுவார். தருணிகாவின் அப்பா முருகேசன் உர நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரின் அம்மா விசாலாட்சி வீட்டில் பணிகளை கவனித்துக் கொள்கிறார். இதுவரை நடந்த மருத்துவ செலவுகளை எல்லாம் முருகேசன் கவனித்துக் கொண்டார்.

ஆனால் இந்த கடைசி கட்ட சிகிச்சைக்கு எங்கு பணம் வாங்குவது என்று தெரியாமல் தருணிகா அப்பா முருகேசன் குழம்பிப் போய் உள்ளார். இந்த குறைபாட்டை குணப்படுத்த Extra cardiac Fontan Procedure சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கடைசிகட்ட சிகிச்சைக்கு மொத்தம் 3.5 லட்சம் ரூபாய் செலவு ஆகும். ஆனால் தருணிகாவின் அப்பாவிடம் அவ்வளவு பணம் இல்லை. தருணிகாவின் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் தருணிகாவின் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100 ரூபாய் கூட இந்த சிறுமியின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+