இதய நோயால் பாதிக்கப்பட்ட 7ஆம் வகுப்பு மாணவன்.. உங்களின் உதவி உயிர் பிழைக்க உதவும்
சென்னை: கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் ரவிக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது. மாணவரின் மருத்துவ செலவுக்காக தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.
சென்னையின் புறநகர் பகுதியான எழில் நகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ரவி 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது குடும்பம் கொஞ்சம் பெரியது. அப்பா காமராஜ் அதிகாலையில் பாரிஸ் கார்னரில் உள்ள ஒரு பேக்கேஜிங் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிடுவார். வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வர எப்படி இருந்தாலும் மணி 10 ஆகிவிடும். அம்மா சரிதா, கணவருக்கும், ரவியுடன் சேர்த்து 5 பிள்ளைகளுக்கும் சமையல் செய்து கொடுப்பதிலேயே காலத்தை தள்ளிவிட்டார். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் பிள்ளைகள் படிக்கிறார்கள், அவகள் என்றாவது ஒரு நாள் நம்மை காப்பாற்றுவார்கள் என்று பெற்றோர் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் அந்த நாள் வந்தது. அதாவது 5 பிள்ளைகளில் இளையவரான ரவி திடீரென பள்ளியில் மயங்கி விழ, பதறியடித்துக்கொண்டு ஓடிய சரிதா, அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகனை அனுமதித்தார். ரவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் பெரியதாக பிரச்னை ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் ரவியின் நடவடிக்கையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டது. முன்பு இருந்ததை போல தற்போது ரவியால் ஓடி ஆடி விளையாட முடியவில்லை, வகுப்பறையில் கவன சிதறல் ஏற்பட்டது.

இதே நிலைமை நீடித்தால் என்ன செய்வது என யோசித்த பெற்றோர் ரவியை பரிசோதனை மையத்திற்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அதாவது, ரவிக்கு ருமாட்டிக் ஹார்ட் டிசீஸ், கடுமையான மிட்ரல் ரெகர்ஜிட்டேஷன், மிதமான நுரையீரல் உயர் இரத்த அழுத்த பிரச்னை இருப்பது தெரியவந்தது. இதை தாய் சரிதாவால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் உடனடியாக சிகிச்சை கொடுக்காவிட்டால் மகன் இறந்துவிடுவான் என்று மட்டும் அவருக்கு தெரியும். உலகமே இருண்டு விட்டதை போன்ற உணர்வு. எங்கு செல்வது? யாரை கேட்பது? லட்சக்கணக்கில் பணம் கிடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லையே. உடைந்து உட்கார்ந்த சரிதா தற்போது வரை மீளவில்லை.

சிலர் மகனை அழைத்துக்கொண்டு மியாட் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். அங்கு ரவியை பரிசோதித்த மருத்துவர்கள் பாதிப்பு இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். ரவி தற்போது இதய செயலிழப்பில் இருக்கிறார். இந்த ஆபத்தான நிலையைச் சமாளிக்க, ரவிக்கு மிட்ரல் வால்வு பழுது எனப்படும் ஆரம்ப அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்காக ரூ.3.5 லட்சம் செலவாகும். ரவியின் பெற்றோர் படித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு இந்த தொகையை எப்படி திரட்டுவது என தெரியவில்லை. அழகான குடும்பம் தற்போது சொல்ல முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யுங்கள். ஒரு சிறிய தொகை கூட ரவியையும், அவரது குடும்பத்தையும் இந்த துயரத்திலிருந்து மீட்டெடுக்க உதவும். முடிந்தவரை உதவுங்கள்.



-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications