7 மாத குழந்தை இதய நோய் பாதிப்பு.. உங்களின் சிறிய உதவி வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்
சென்னை: கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 மாத குழந்தைக்கு உதவுங்கள். சிறிய உதவி கூட பெரிய மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு சமீபத்தில் திருமணமான நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை பிறந்தது. அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தும் இந்த குடும்பத்திற்கு இந்த குழந்தை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேலை எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும் குழந்தையை பார்க்கும் போது எல்லாம் பறந்து போய்விடும். அப்படிதான் இந்த பாபு-ஹேமாவதி தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் எதிர்பாராத அந்த நாள் வந்தது. குழந்தை எந்த காரணமும் இல்லாமல் தேம்பி தேம்பி அழுதது. அதேபோல வேகமாக மூச்சு வாங்கி ஒரு கட்டத்தில் அது சுவாச பிரச்னையாக உருவெடுத்தது. உள்ளூர் மருத்துவமனையில் பார்த்தார்கள். எந்த பலனும் இல்லை. தங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் முயன்று பார்த்தார்கள் ஆனால் எதுவும் குழந்தையின் நிலையை மாற்றவில்லை. இப்படியான சூழலில்தான் திருவள்ளூர் மாவட்டத்தில் மியாட் மருத்துவமனை நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில் பாபுவும், ஹேமாவும் குழந்தையை கொண்டு வந்தனர்.

குழந்தையை பரிசோதித்து பார்த்தபோது அதன் இதயத்தில் துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் இத்தனை நாட்களாக குழந்தையை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. மருத்துவ மொழியில் சொல்வதெனில் இதனை விஎஸ்டி (VSD- ventricular septal defect) வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு என்று சொல்வார்கள். அதாவது இதயத்தின் கீழ் உள்ள இரண்டு அறைகளை பிரிக்கும் சுவரில் துளை இருக்கிறது. அதேபோல பகுதி ஒழுங்கற்ற நுரையீரல் சிரை வடிகால் (PAPVD) பிரச்னையும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பிறவி குறைபாடுகளாகும். இதை சரி செய்யாவிடில் உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் இதை சரி செய்ய ரூ.3.25 லட்சம் செலவாகும். இவ்வளவு பொருளாதார வசதி இவர்களிடம் கிடையாது. எனவே இந்த குழந்தையை காப்பாற்ற தங்களால் இயன்ற உதவியயை செய்யுங்கள். சிறிய உதவி நிச்சயம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications