For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களின் சிறு உதவி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சிறுவனின் உயிரைக் காக்கும்

சென்னை: இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் 12 வயது சிறுவனுக்கு உங்களால் முடிந்த நிதி உதவிகளை உடனே செய்திடுங்கள்.

நெல்லூர் மாவட்டத்திற்கு கீழ் வரும் இருக்கம் தீவுப்பகுதியை சேர்ந்த தம்பதி எல்லியா மற்றும் கலா. இவர்களின் 12 வயது சிறுவன் திருமலாதான் தற்போது இதயம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். பிறந்து சில மாதங்களே ஆன போது திருமலாவிற்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

எல்லியா மற்றும் கலா தம்பதியினர் அவ்வளவு வசதியான பின்னணியை கொண்டவர்கள் கிடையாது. இவர்கள் இருக்கம் தீவு பகுதியில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அரும்பாக்கம் அருகே உள்ள பள்ளியில் திருமலா படித்துக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொரு முறையும் படகில் வந்து பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்த திருமலா பணத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக அரும்பாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிலேயே தங்கி படித்துக்கொண்டு இருக்கிறார்.

Help to save 12 year old Fisherman Son Kasimgadu Thirumala from Heart Problem

இந்த நிலையில்தான் பள்ளியில் நடந்த மெடிக்கல் கேம்ப் ஒன்றில் திருமலாவிற்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக திருவள்ளூர் குழந்தைகள் மருத்துவனையில் திருமலாவிற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அங்கு இவரை சோதனை செய்த மருத்துவர்கள் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 2019ல் சேர்க்க பரிந்துரை செய்துள்ளனர்.

ஆனால் சிறுவனுக்கு சிகிச்சை மேற்கொள்ள பெற்றோரிடம் பணம் இல்லை. அவ்வப்போது பணம் சேர்த்து திருமலாவை அவரது பெற்றோர் சென்னை அரும்பாக்கம் பகுதிக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை திருமலாவிற்கு உறுதியான, தொடர் சிகிச்சை வழங்கப்படவில்லை.

திருமலாவிற்கு Originally large sub arterial, outlet septal type VSD restricted by RCC prolapsed, left to right shunt, deformed RCC with Mild AR, intact IAS ஆகிய பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Help to save 12 year old Fisherman Son Kasimgadu Thirumala from Heart Problem

இதற்காக உடனடியாக VSD Closure + Aortic Valve Repair for correction சிகிச்சையை சிறுவனுக்கு மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சிகிச்சைக்கு மருத்துவ செலவுகள், தங்கும் செலவுகள் எல்லாம் சேர்த்த மொத்தம் 2,60,000 ரூபாய் செலவு ஆகும்.

ஸ்மார்ட் போன் வாங்க முடியாத காரணத்தால் லாக்டவுன் காரணமாக திருமலா பள்ளி படிப்பையும் நிறுத்திவிட்டார். பெற்றோர்களும் லாக்டவுன் காரணமாக போதிய வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்கள். சிறுவன் படிப்பின் மீது ஆர்வமாக இருந்தாலும் பெற்றோரால் அவருக்கு ஒரு போன் வாங்கித்தர முடியவில்லை. சிறுவன் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியும் பொருந்தாது.

திருமலாவிற்கு சிகிச்சை அளிக்க கூடிய பொருளாதாரம் அவரின் குடும்பத்தில் இல்லை. அவரின் அப்பா, அம்மா இருவரும் போதிய நிதி இன்றி கையறு நிலையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மனது வைத்தால் இவருக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும்.

நீங்கள் நிதி கொடுத்து உதவி செய்தால் மட்டுமே திருமலாவிற்கு சிகிச்சை மேற்கொள்ள முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே திருமலாவிற்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள். இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் சிறுவனுக்கு உங்களால் முடிந்த உதவிகளை உடனே செய்திடுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X