சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. திடுக் தகவல்கள்.. நடந்தது என்ன?
போபால்: இந்தியில் பிரபலமான சீரியல் நடிகை வைஷாலி தக்கர் அவருடைய முன்னாள் காதலனின் டார்ச்சரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி, ரக்ஷாபந்தன், கா, சசுரல் சிமர் போன்ற இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்தார். இவருக்கு 30 வயதாகிறது.
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் படுஆக்டிவ்வாக இருந்தார். இவரை 5 லட்சத்திற்கும் மேலானோர் பின் தொடர்கிறார்கள்.

புகைப்படங்கள்
இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள், ஷூட்டிங் ஸ்பாட் சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருவது வழக்கம். இந்த நிலையிலே வைஷாலிக்கு அவருடைய காதலன் டாக்டர் அபிநந்தனுடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இருவருக்கும் ஜூனில் திருமணம் முடிவான நிலையில் அந்த காதல் முறிந்துவிட்டது.

சாப்ட்வேர் என்ஜீனியர்
இதையடுத்து அவர் அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியருடன் திருமணம் நடைபெறுவதாாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் ஜரூராக செய்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் இந்தூரில் உள்ள தனது வீட்டில் அவர் நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

திடுக் தகவல்கள்
அவர்கள் அங்கிருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில் பல திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் அவர் ராகுல் என்பவர் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த ராகுல் தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராகுலின் தன்னை டார்ச்சர் செய்வது அனைத்தும் அவரது மனைவி திவ்யாவுக்கு தெரியும். ஆனால் தன் கணவனை காப்பாற்றுவதற்காக பொதுவெளியில் என்னை அசிங்கமாக திவ்யா திட்டினார்.

நல்ல மகள்
லவ் யூ அப்பா, அம்மா. நான் ஒரு நல்ல மகளாக இருக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். தயவு செய்து ராகுலையும் அவரது குடும்பத்தினரையும் தண்டிக்க வேண்டும். ராகுலும், திவ்யாவும் என்னை 2 ஆண்டுகளாக சித்ரவதை செய்தனர். அவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால் எனது ஆத்மா சாந்தி அடையாது. I Quit என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

முறிவுக்கு காரணம் ராகுல்
ராகுல் வைஷாலியின் முன்னாள் காதலன் என சொல்லப்படுகிறது. மேலும் ராகுல், வைஷாலியின் பக்கத்து வீட்டில் வசிப்பவராம். அபிநந்தனுடனான காதல் முறிந்ததற்கு ராகுல்தான் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. தன்னுடன் வைஷாலி எடுத்த புகைப்படங்களை அபிநந்தனுக்கு ராகுல் அனுப்பியதாக தெரிகிறது.

விசாரணையை தொடங்கி போலீஸ்
இந்த புகைப்படங்களால்தான் அபிக்கும் வைஷாலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் சாப்ட்வேர் என்ஜீனியருடன் திருமணம் நடக்கவுள்ள நிலையில் அதையும் ராகுல் கெடுத்துவிடுவாரோ என்று அஞ்சிய வைஷாலி இந்த துயரமான முடிவை எடுத்திருக்கலாம் என தெரிகிறது. வைஷாலியின் கடிதத்தை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications