ஓசூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட குழந்தை.. எறும்புகள், எலி கடித்து உயிரிழந்த சோகம்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூர் அருகே முட்புதரில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தை, முட்புதரில் வீசப்பட்ட நிலையில், எறும்புகளும் எலிகளும் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கங்கா நகர் பகுதியில் யாரோ ஒருவர், பிறந்து இரண்டு தினங்களே ஆன பெண் சிசுவை வீசி சென்றுவிட்டு தப்பியுள்ளார்.

new born girl baby died after thrown to brier in hosur

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் முட்புதிரில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்துள்ளனர். அங்கு பிறந்த பெண் சிசு, எறும்புகள் மற்றும் எலிகளால் கடித்துக் குதறப்பட்ட நிலையில், கதறி அழுதபடி உயிருக்கு போராடிக் கொண்டுஇருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு ஒசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஓசூர் இதையடுத்து, முட்புதரில் கிடந்த பெண் குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனது. பச்சிளம் குழந்தையை முட்புதரில் தூக்கி எறிந்து சென்ற கல் நெஞ்சக்காரர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+