கிருஷ்ணகிரியில் கொலை குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. நள்ளிரவில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த கர்நாடக மாநிலத்தில் கொலை குற்றவாளிகளை நள்ளிரவில் துப்பாக்கியால் போலீஸார் சுட்டுபிடித்தார்.

கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் தாலூகா சிங்சேனா அக்ரகாரம் என்னும் கிராமத்தின் பின்புறமாக உள்ள ஒரு வீட்டில் ஸ்வேதா என்கிற பெண் தனியாக இருப்பதை அறிந்த இரண்டு கொள்ளையர்கள் அவரை கொலை செய்து வீட்டில் இருந்த தங்கநகைகளை கடந்த வாரம் திருடி சென்றனர்.

Police arrested 2 robberers by shot in their legs

இந்த வழக்கில் எப்பகோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடிவந்தநிலையில், ஆனேக்கல் அருகே முத்தாள மடுகு என்னுமிடத்தில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Police arrested 2 robberers by shot in their legs

நேற்றிரவு குற்றவாளிகளை பிடிக்க முயற்சி மேற்கொண்டு நள்ளிரவில் போலீஸார் இரண்டு பேரையும் சுற்றி வளைத்துள்ளனர். அப்போது இருவரும் போலீஸாரை கத்தியால் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எப்பகோடி காவல் ஆய்வாளர் கவுதம், பன்னார்கட்டா காவல் உதவி ஆய்வாளர் கோவிந் ஆகிய இருவரும் தங்களது துப்பாக்கியால் இரண்டு கொள்ளையர்களையும் முட்டிக்கு கீழ் பகுதியில் சுட்டு கைது செய்துள்ளனர்.

சுடப்பட்ட இருவரும் சைக்கா (எ) வேலு , பாலா(எ) பாலகிருஷ்ணா என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்த இருவருக்கு ஆனேக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்நிலையில் கொலையாளிகளை போலீஸார் நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் ஆனேக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+