ரூ 5 லட்சம் பாக்கி.. ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக் கொலை.. ஒசூரில் திகில் சம்பவம்!
ஒசூர்: ஒசூரை அடுத்த தளி அருகே 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தளி அருகே பெல்லுர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் ரெட்டி (30). இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், மகன், மகள் உள்ளனர்.
லோகேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக லோகேஷ் ரெட்டியிடம் எது பூசன் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.

கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில்
லோகேஷ் மற்றும் எது பூசன் ரெட்டி கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் தற்போது தனிதனியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் லோகேஷ் தொடர்ந்து பணம் தர மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எது பூசன், மற்றும் அவரது கூட்டாளிகள் மூன்று பேர் பெல்லுரில் உள்ள லோகேஷ் வீட்டிற்கு நள்ளிரவு சென்றனர்.

கைத்துப்பாக்கி
அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லோகேஷை கதவை தட்டி வெளியே அழைத்து கைத்துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சப்தம் கேட்டு வெளியே வந்த ஜெயந்தி கணவனின் நிலையை கண்டு கதறி அழுதுள்ளார். பின்னர் அருகிலிருந்தவர்கள் லோகேஷை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மருத்துவர்கள் லோகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

ஆட்கடத்தல்
சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எது பூசன், கஜா (எ) கஜேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கொலை, ஆட்கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.

ரூ 5 லட்சம்
முதற்கட்ட விசாரணையில் நிலம் விற்பனை தொடர்பாக லோகேஷுக்கும் எதுபூசனுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. லோகேஷ் கொடுக்க வேண்டிய ரூ 5 லட்சம் பணத்தை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த எதிர்தரப்பு அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது.












Click it and Unblock the Notifications