ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக துண்டுடன் ஒசூர் கோயிலில் சசிகலா வழிபாடு.. கொடியை பறித்தாச்சு.. துண்டை என்ன செய்ய முடியும்?

Google Oneindia Tamil News

ஒசூர்: காரில் பொருத்தப்பட்ட அதிமுக கொடி பறிக்கப்பட்ட நிலையில் கழுத்தில் அதிமுக துண்டுஅணிந்து கொண்டு ஒசூர் மாரியம்மன் கோயிலில் சசிகலா வழிபாடு நடத்தினார்.

Recommended Video

    அதிமுக துண்டுடன் ஒசூர் கோயிலில்சசிகலா வழிபாடு - வீடியோ

    சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவர் கடந்த ஒரு வார காலம் கோடாகுருக்கி பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

    சசிகலா ராசிக்கு லாப ஸ்தானத்தில் 6 கிரகங்கள் - அரசியல் எதிர்காலம் எப்படி சசிகலா ராசிக்கு லாப ஸ்தானத்தில் 6 கிரகங்கள் - அரசியல் எதிர்காலம் எப்படி

    பொருத்தப்பட்ட கார்

    பொருத்தப்பட்ட கார்

    இந்த நிலையில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா பண்ணை வீட்டிலிருந்து புறப்பட்டார். இதனிடையே தமிழக எல்லையில் அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக எல்லையான ஜூஜூவாடி வந்தவுடன் சசிகலாவின் காரில் பொருத்தப்பட்டிருந்த கொடி அகற்றப்பட்டது.

    கார் தடுத்து நிறுத்தம்

    கார் தடுத்து நிறுத்தம்

    பின்னர் அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் இருந்து கொடி அகற்றப்பட்டதை அடுத்து அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட மற்றொரு காரில் பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் ஒசூர் அருகே அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அதிமுக துண்டு

    அதிமுக துண்டு

    பின்னர் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஒசூரில் உள்ள பிரபல மாரியம்மன் கோயிலுக்கு சசிகலா சென்றார். அங்கு அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவர் தனது கழுத்தில் அதிமுக துண்டை அணிந்திருந்தார்.

    காவல் துறை

    காவல் துறை

    காரில் இருந்த அதிமுக கொடியை பறித்த காவல்துறை இவர் கழுத்தில் அணிந்திருக்கும் அதிமுக துண்டை என்ன செய்யும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கோயிலில் இருந்து வெளியே சசிகலா தொண்டர்களை பார்த்து கையசைத்தார். சசிகலா முதல்வராக வேண்டும் என அமமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

    English summary
    Sasikala worships in Mariyamman temple at Hosur. She wears AIADMK shawl.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X