சுவாதி தலையை மொட்டையடித்து.. முகத்தை சிதைத்து.. கொடூர ஆணவ கொலை!
சுவாதியின் முகத்தை சிதைத்து கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.
Recommended Video

ஓசூர்: சுவாதியின் தலையை மொட்டை அடித்து.. முகத்தை சிதைத்து.. அடிவயிறை நொறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கமல் கூட்டத்துக்கு சென்ற முயன்றபோதுதான் இந்த கொலை நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஓசூரை சேர்ந்த நந்தீஷ் - சுவாயும் காதலித்தார்கள். வேறு வேறு சாதி என்பதால், கோயிலில் வைத்து தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டார்கள். முறைப்படி பதிவும் பண்ணிக் கொண்டார்கள்.
எங்கோ ஒரு மரக்கடையில் நிம்மதியாக வேலை பார்த்துகொண்டிருந்த இவர்களை கடைசியில் குடும்பத்தார் கண்டு பிடித்தும் விட்டார்கள்.

சுவாதியின் டீ-ஷர்ட்
பிறகு மாண்டியாவில் அழுகிய நிலையில் இருவரது பிணத்தையும் போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தினார்கள். நந்தினி டீ-ஷர்ட்டில் சூடுகொண்டப்பள்ளி என அச்சிடப்பட்டு இருந்தது. இதை வைத்துதான் உயிரிழந்தவர்கள் ஓசூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என யூகிக்கப்பட்டுதான் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இறுதியில் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் இவர்களை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழுகிய உடல்கள்
இந்த ஆணவபடுகொலையை கண்டு தமிழகமே மீண்டும் ஒருமுறை அதிர்ந்தது. பல்வேறு தரப்பினர் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் காதல் ஜோடியின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களது உடல்கள் ரொம்பவும் அழுகி இருந்ததால் இங்கு கொண்டு வரமுடியவில்லை. அதனால் மாண்டியாவிலேயே தகனம் செய்துவிட்டனர்.

மக்கள் நீதி மய்யம்
ஆனால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ரொம்ப பயங்கரமாக வந்திருக்கிறது என்று பெலகவாடி போலீசார் கூறுகிறார்கள். அவர்கள் இதுகுறித்து சொல்லும்போது, "இந்த ஜோடி ஓசூரிலிருந்து கடந்த 10ம் தேதி இரவு ராம்நகர் பகுதிக்கு கிளம்பியுள்ளனர். அங்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்க இருப்பதால் அதில் கலந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார்கள். அப்போதுதான் சுவாதியின் சொந்தக்காரர்கள் யாரோ பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு தகவல் சொல்லி உள்ளனர்.

மாண்டியாவுக்கு கடத்தல்
பிறகு சுவாதியின் அப்பா சீனிவாசன், தன் அண்ணன் வெங்கடேஷ், சொந்தக்காரர் கிருஷ்ணனை தன்னுடன் கூட்டிக் கொண்டு, வாடகைக்கு ஒரு காரையும் பிடித்து கொண்டு அவர்களை தேடி கண்டுபிடித்தார். ஜோடியிடம் சமாதானம் ஆகிவிட்ட ரேஞ்சுக்கு பேசி, மனசை மாற்றி மாண்டியாவுக்கு கடத்தி சென்று விட்டது இந்த கும்பல். அந்த இடத்தில்தான் ஜோடியை பிரிந்து போய் விடுமாறு கூற, அதற்கு தம்பதி மறுப்பு சொல்ல... பிறகுதான் தங்கள் வேலையை காட்டியுள்ளனர் மூவரும்!!

முகத்தை சிதைத்தனர்
காரில் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் 2 பேரையும் தலை உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள். இருவரும் உயிரிழந்த பிறகும் ஆத்திரம் இவர்களுக்கு தீரவில்லை. அதனால் அவர்கள் முகம் தெரியாமல் இருக்க, முகங்களை கொடூரமாக சிதைத்து விட்டார்கள்.

மொட்டை அடித்தனர்
சுவாதியின் தலை முடியை பிளேடால் வழித்து எடுத்து மொட்டை அடித்து விட்டார்கள். சுவாதியின் அடிவயிறு மோசமாக சிதைத்து உருதெரியாமல் ஆக்கிவிட்டனர். அதற்கு பிறகுதான் 2 பேரின் உடல்களை கட்டி ஆற்றில் வீசி எறிந்துவிட்டு தப்பி வந்துவிட்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வளவு கொடூரமாக இந்த காதல் தம்பதி கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்ட தமிழக மக்கள் மேலும் கொதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications