மாஸ்டர் பிளான்! ஓ பெங்களூர் எதிர்ப்பை சரிகட்டி இப்படித்தான் ஓசூரில் ஏர்போர்ட் கட்ட போகிறார்களா! செம
ஓசூர்: கர்நாடகாவின் எதிர்ப்பை மீறி ஓசூரில் ஏர்போர்ட் கட்ட முக்கியமான திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு வகுத்து உள்ளதாம். இதற்காக சிறப்பு பிளானிங் ஒன்றை தமிழ்நாடு அரசு வகுத்து உள்ளது.
ஓசூரில் உருவாக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு பெங்களூர் முட்டுக்கட்டை போடும் என்று தகவல்கள் வருகின்றன. இதை கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் விமான நிலையமான BAIL பெங்களூரை சுற்றி ஏர்போர்ட் அமைக்க ஓசி.. அதாவது தடை சான்றிதழ் வாங்கி உள்ளது. அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றால் மத்திய அரசு பெங்களூரை சுற்றி புதிய விமான நிலையம் அமைக்க வாய்ப்பு கொடுக்காது. இதை பயன்படுத்தி ஓசூரில் விமான நிலையம் அமைக்க பெங்களூர் எதிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இந்த விவகாரம் கணம் பெற்றுள்ளது.
பெங்களூர் என்று இல்லை எந்த ஏர்போர்ட்டில் இருந்தும் 150 கிமீ தூரத்தில் இன்னொரு ஏர்போர்ட் அமைய கூடாது என்பது விதி.
திட்டம் என்ன? ஆனால் கர்நாடகாவின் எதிர்ப்பை மீறி ஓசூரில் ஏர்போர்ட் கட்ட முக்கியமான திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு வகுத்து உள்ளதாம். இதற்காக சிறப்பு பிளானிங் ஒன்றை தமிழ்நாடு அரசு வகுத்து உள்ளது.
1. முதல் திட்டப்படி அதீத அவசியம் இருந்தால்.. சில காரணங்களுக்காக கிரீன்பீல்ட் விமான நிலையங்களை 150 கிமீ தூரத்திற்கு உள்ளே கட்டலாம். இதன் காரணமாக.. ஓசூரில் கட்ட சிறப்பு அனுமதி பெற முடியும்.
2. இன்னொரு பக்கம் அரசு தரப்பு சோர்ஸின் கூற்றுப்படி, தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) உயர் அதிகாரிகள் சமீபத்தில் இந்த பிரச்சினையை தொடர்பாக பெங்களூரின் BIAL பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். BIAL பாசிட்டிவாக பதில் சொல்லி உள்ளது. வரும் நாட்களில் மேலும் ஆலோசனைகள் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.
3. BIAL உடன் நாங்கள் ஒரு சந்திப்பை நடத்தினோம், 2033 ஆம் ஆண்டு வரை 150 கிலோமீட்டர் சுற்றளவில் புதிய விமான நிலையம் இருக்கக் கூடாது என்ற ஒப்பந்த அவர்களிடம் உள்ளது என்பதையும் அறிந்துள்ளோம். எனவே அதற்கு முன் ஓசூர் விமான நிலையத்தை இயக்குவதற்கான அனைத்து முறைகளையும் ஆராய்வோம். எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன. விரைவில் அறிவிப்போம்.
4. பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை (KIA) இயக்கும் BIAL இல் கனடிய பில்லியனர் பிரேம் வாட்சாவின் ஃபேர்ஃபாக்ஸ் குழுமம் 64% பங்குகளை வைத்திருக்கிறது, அதே சமயம் சீமென்ஸ் ப்ராஜெக்ட் வென்ச்சர்ஸ் 10% பங்குகளை வைத்திருக்கிறது. மீதமுள்ள 26% கர்நாடகா மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (13%) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் (13%) வசம் உள்ளது. கனடிய பில்லியனர் பிரேம் வாட்சாவின் உடன் ஆலோசனை செய்து இந்த விமான நிலையத்திற்கு அனுமதி பெற தமிழ்நாடு அரசு திட்டங்களை வகுத்து வருகிறதாம்.
ஓசூர் வளர்ச்சி; தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள், மாவட்டங்கள் பல உள்ளன. உதாரணமாக கோவை, திருச்சி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி ஆகியவை தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்கள் ஆகும். அதிலும் ஓசூர் நகரம் பெங்களூருக்கு இணையாக வேகமாக வளர்ந்து வருகிறது.
பெங்களூர் நகரைவிட வளர்ச்சியில் ஓசூர் தற்போது வேகம் எடுத்துள்ளது. விலை குறைந்த நிலம், பெங்களூரின் அதே கிளைமேட், அரசியல் ரீதியாக அதிக சிரத்தன்மை, நல்ல போக்குவரத்து, டிராபிக் இல்லை உட்பட்ட காரணங்கள் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஓசூர்: முன்பெல்லாம் சென்னைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த முதலீடு கவனம் தற்போது மற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இப்படி பல்வேறு விஷயங்களால் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூருக்கு செல்ல வேண்டிய பல்வேறு முதலீடுகள் ஓசூரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதனால் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டங்களும் உள்ளன. இந்த நிலையில்தான் ஓசூரில் விமான நிலையம் அமைவதை அப்போதே ஒரு தரப்பினர் கர்நாடகாவில் எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications