கர்நாடகா ஓகே சொல்லலைனாலும்.. ஓசூருக்கு மெட்ரோ உறுதி.. அதிரடியை காட்டிய தமிழ்நாடு அரசு.. இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூர் - பெங்களூர் மெட்ரோவை கர்நாடக அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஓசூரில் மெட்ரோ அமைப்பதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.

இதற்கான முக்கியமான டெண்டர் நேற்று விடப்பட்டு கையெழுத்தானது. பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் - சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது (BARSYL) - பெங்களூரின் பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஓசூர் இடையே மெட்ரோ போக்குவரத்து பாதையை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரிப்பதற்கான குறைந்த ஏலத்தில் கையெழுத்திட்டது.

Tamil Nadu in fast mode, Finishes the Hosur Bangalore Metro first stage tenders

பெங்களூரு, கர்நாடகாவில் உள்ள பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டின் ஓசூர் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் பாதையை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (டிஎஃப்ஆர்) தயாரிப்பதற்காக 11 நிறுவனங்கள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) நிறுவனத்திடம் ஏலம் சமர்ப்பித்துள்ளன.

இதில்தான் பாலாஜி ரெயில்ரோடு சிஸ்டம்ஸ் - சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது (BARSYL) - பெங்களூரின் பொம்மசந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ஓசூர் இடையே மெட்ரோ போக்குவரத்து பாதையை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DFR) தயாரிப்பதற்காக தேர்வாகி உள்ளது.

மெட்ரோ பாதை: NH-44 இல் சுமார் 18 கிமீ நீளமுள்ள இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பாதை அட்டிபெல்லே வழியாக செல்லும். இதில் 11.5 கிமீ பாதை கர்நாடகாவில் அமைந்துள்ளது மற்றும் மீதமுள்ள 6.5 கிமீ தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையினை சமர்ப்பிக்கும் நிறுவனம், மெட்ரோ பாதை, மெட்ரோ வகை (மெட்ரோ, மெட்ரோலைட், மெட்ரோ நியோ), மதிப்பிடப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை, எத்தனை நிலையங்கள் & டிப்போவின் இருப்பிடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுமான செலவுகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை மேற்கொள்ளும். இதை தயாரிக்கவே தற்போது ஏலம் பிவிடப்பட்டு உள்ளது.

CMRL 180 நாள் நிறைவு காலக்கெடுவுடன் ரிப்போட்டை தயாரிக்க வேண்டும் என்று கூறி ஆகஸ்ட் 2023 இல் ஆலோசகரை நியமிப்பதற்கான ஏலங்களை விடுத்தது.

கர்நாடகா எதிர்ப்பு: ஓசூரில் உருவாக்கப்பட உள்ள மெட்ரோவோடு பெங்களூர் மெட்ரோவை இணைப்பதற்கு கர்நாடக அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த பணிக்கு கர்நாடகா முட்டுக்கட்டை போடும் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூர் நகரைவிட வளர்ச்சியில் ஓசூர் தற்போது வேகம் எடுத்துள்ளது. விலை குறைந்த நிலம், பெங்களூரின் அதே கிளைமேட், அரசியல் ரீதியாக அதிக சிரத்தன்மை, நல்ல போக்குவரத்து, டிராபிக் இல்லை உட்பட்ட காரணங்கள் ஓசூர் வேகமாக வளர்ந்து வருகிறது.

முன்பெல்லாம் சென்னைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த முதலீடு கவனம் தற்போது மற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் சோறும் வேகமாக வளர்கிறது.

விரும்பவில்லை: இதனால்தான் கர்நாடகா இதை எதிர்ப்பதாக கூறப்படுகிறது. தற்போது பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. இங்கே பணிகள் முடிந்த பின் ஓசூர் - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் பணிகள் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இதை விரும்பவில்லையாம். சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், ஓசூரில் குறைந்த வாழ்க்கைச் செலவு மிக மிக குறைவு. அதேபோல் தொழில்துறை நிலம் கிடைப்பது மிகவும் எளிது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால் பெங்களூருக்கு எதிராக இந்த விஷயம் திரும்பும். இதனால் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ திட்டம் கர்நாடகாவிற்கு எதிராக மாறக்கூடும் என்று கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

20.5 கிமீ மெட்ரோ பாதையில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணியை CMRL ஏற்கனவே தொடங்கியுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதில் முனைப்பு காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓசூருக்குள் மட்டும் கூடுதல் கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ அமைக்கப்படும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+