கார் விபத்து.. அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உயிர் தப்பினார்
ஓசூர் அருகே அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கார் விபத்துக்குள்ளானது.
Recommended Video

ஓசூர்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக உள்ளவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் ஏற்கனவே இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். ஓசூர் இவரது சொந்த ஊர் ஆகும்.

இந்நிலையில், இன்று மாலை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
தின்னூர் என்ற இடத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேகமாக வந்த மற்றொரு கார் அமைச்சரின் கார் மீது பலமாக மோதிவிட்டது. இதில் அமைச்சரின் கார் விபத்துக்கு உள்ளானாலும் அமைச்சர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் அவரது கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
அமைச்சரின் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் மற்றும் உயரதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விபத்து சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications