ஓசூரில் வாலிபர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிப் படுகொலை .. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை!
ஒசூர்: ஓசூர் வசந்த நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து அட்கோ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் வசந்த நகர் 3வது குறுக்கு தெருவில் வாழ்ந்து வருபவர் லோகேஷ், இவரது வீட்டின் மேல் தளத்தில் ரகுராம் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் இன்று ரகுராமன் மனைவி வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு ஓசூர் அண்ணைநகரை சேர்ந்த பாலாஜி என்பவர் சென்றுள்ளார். அப்போது அந்தப்பகுதிக்கு வந்த 3 மர்ம நபர்கள் ரகுராமின் வீட்டின் முன்பு பாலாஜியை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
பின்னர் மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஓசூர் அட்கோ காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து ஒசூர் டிஎஸ்பி முரளி மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications