குழந்தைக்கு யார் மருந்து தருவது.. தம்பதிக்குள் வெடித்த தகராறு.. ரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட மனைவி
ரயில் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்
Recommended Video
ஓசூர்: குழந்தைக்கு யார் மருந்து தருவது என்பதுதான் தம்பதிக்குள் சண்டை.. கடைசியில் தற்கொலை வரை இந்த விஷயம் போய்விட்டது!
ஓசூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு பெண் கைக்குழந்தையுடன் இன்று காலை வந்தார்.. அப்போது பெங்களூருவை நோக்கி மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த குழந்தையை ஒரு ஓரமாக படுக்க வைத்துவிட்டு, திடீரென அந்த ரயில் முன்பு பாய்ந்தார்.

இதில் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆனால் அப்பெண் உடல் சிதறி அங்கேயே உயிரிழந்தார். இதை கண்ட அங்கிருந்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து வந்தனர்.
தண்டவாளத்தில் இருந்த கற்கள் சிதறி குழந்தையின் நெற்றியில் பட்டதால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. அதனால், குழந்தையை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள், பெண்ணின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த பெண் மூக்காண்டப்பள்ளியை சேர்ந்த 25 வயது சுவேதா என்பதும், உயிர் தப்பிய 10 மாத பெண் குழந்தையின் பெயர் சுருதி லட்சுமி என்பதும் தெரியவந்துள்ளது. இப்போது குழந்தையின் நெற்றியில் கட்டு போடப்பட்டு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை, குழந்தை நன்றாக இருப்பதாக டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.
சுவேதாவின் கணவர் பெயர் முரளி.. குழந்தைக்கு யார் மருந்து தருவது என்பதில் இவர்களுக்கு நேற்றிரவு சண்டை வந்துள்ளது.. இந்த சண்டைதான் பெரிய விவகாரமாக வெடித்து, சுவேதா குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு வந்துவிட்டது. மன உளைச்சல் காரணமாக ரயில் முன் விழுந்து தற்கொலை முடிவுக்கும் சுவேதா வந்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தையுடன் சாகலாம் என்றுதான் முடிவெடுத்து வந்துள்ளார் ஸ்வேதா.. ஆனால் கடைசி நேரத்தில் மனம்மாறி, குழந்தை உயிரோடு இருக்கட்டும் என்று நினைத்து.. தான் மட்டும் ரயிலில் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
நீட் தேர்வு ரத்தால் மன உளைச்சல்.. கோவை 19 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications