Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானாவின் ‘தனிக்காட்டு ராஜா’: உச்சியில் ஏற்றிய பிடிவாதம்.. சந்திரசேகர் ராவ் பற்றிய 10 தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் தீவிரத்துடன் களமிறங்கியுள்ளார் சந்திரசேகர் ராவ். காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிறகு தனிக் கட்சி என ஆந்திர அரசியலில் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, இன்று தெலுங்கானா மாநிலத்தின் தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் கேசிஆர் பற்றிய 10 தகவல்களைப் பார்க்கலாம்.

தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது முதல், அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார் கேசிஆர். நாட்டின் மிக இளைய மாநிலத்தின் முடிசூடா மன்னராக, முதலமைச்சராக இருக்கும் சந்திர சேகர் ராவுக்கு இந்த சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான சவால். காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் என மும்முனை மோதல் நிகழும் சூழலில் யாருக்கு வெற்றி என அறிய இன்னும் சரியாக 1 மாதம் தான் காத்திருக்க வேண்டும். கேசிஆர் கடந்து வந்த பாதை பற்றிய 10 பாயிண்ட்ஸ் இங்கே:

10 facts about the one and only Chief minister of Telangana Chandrashekar Rao

1. தனது அரசியல் வாழ்க்கையை இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடங்கியவர் சந்திரசேகர் ராவ். 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறி தெலுங்கு தேசம் கட்சியில் இணைய முடிவெடுத்தார் சந்திரசேகர ராவ். காங்கிரஸ் கட்சியில் முன்னணி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடுவும் அப்போதுதான் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்திருந்தார். அன்றைய ஆந்திர அரசியலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த முக்கிய தலைவர்கள் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.

2. தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த சந்திரசேகர் ராவ், சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெற்ற வெற்றியால் எப்படியும் தனக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும் எனப் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால், சட்டசபை துணை சபாநாயகர் பதவியை அளித்தார் அன்றைய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. இதனால் கடுமையாக அதிருப்தி அடைந்தாலும், அப்பதவியை ஏற்றுக்கொண்ட சந்திரசேகர ராவ், ஒரே ஆண்டில் அதாவது 2001ல் தனது பதவியை துறந்து கட்சியை விட்டு விலகினார்.

3. பின்னர், தனி மாநிலம் 'தெலுங்கானா' என்ற கோரிக்கையோடு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைத் தொடங்கினார் சந்திர சேகர ராவ். அதன் பின்னர் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய சந்திரசேகர ராவ், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஐந்து தொகுதிகளில் வென்றார். அன்றைய நாளில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆனார்.

4. ஆனால், காங்கிரஸ் கட்சியும் தனி தெலங்கானாவுக்கான எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் கூட்டணி, பதவி என அனைத்தையும் உதறிவிட்டு, தனி தெலுங்கானாவுக்கான குரலை வலிமையாக ஒலித்தார். 2009 இல், தெலுங்கானாவை உருவாக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரது கட்சி தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்தது.

5. தேர்தல் முடிவில் 206 இடங்களைப் பெற்று வென்றது காங்கிரஸ். மீண்டும் சறுக்கினார் சந்திரசேகர ராவ். பின்னர் நவம்பர் 2009 இல், இந்திய நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் கேசிஆர். 11 நாட்களுக்குப் பிறகு, தெலுங்கானா தனி மாநிலத்திற்கு ஒப்புதல் அளித்தது மத்திய அரசு. இருப்பினும், புதிய மாநிலம் அமைப்பதற்கு முன் கூடுதல் ஆலோசனைகள் தேவை என்று தெரிவித்தது.

6. தெலுங்கானா முழக்கமும் காலி, சந்திரசேகர ராவும் காலி என விமர்சனத்துக்கு உள்ளானார் சந்திரசேகரராவ். அதன் பிறகு சில நாட்களில் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் மரணமடைந்தார் அன்றைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி. இந்த நேரத்தில் மீண்டும் தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தீவிரமாக களமாடினார் சந்திரசேகர ராவ். போராட்டம், வேலைநிறுத்தம் என கேசிஆர் அதிரடி காட்ட, தனி தெலுங்கானா கோரிக்கையை ஏற்றது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ்.

7. கேசிஆரின் விடாப்பிடி முயற்சிகளால் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி தெலங்கானா மாநிலம் உருவானது. தனி மாநிலத்திற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்த கேசிஆரின் கட்சி, 17 மக்களவைத் தொகுதிகளில் 11 இடங்களையும், 119 சட்டமன்றத் தொகுதிகளில் 63 இடங்களையும் வென்று தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடித்தது. தனித் தெலுங்கானா அமைந்ததும், அந்த மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவி ஏற்றார் கேசிஆர். ஜூன் 2, 2014 அன்று மதியம் 12.57 மணிக்கு தெலுங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக கேசிஆர் பதவியேற்றார். ஜோதிடம், எண் கணிதம் மற்றும் வாஸ்து ஆகியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்ட சந்திர சேகர் ராவ், ஜோதிடர்களின் ஆலோசனையின்படி 12.57 மணிக்கு பதவியேற்றார்.

8. எனினும், சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிய 8 மாதங்கள் இருக்கும் போதே அதிரடியாக சட்டப்பேரவையை கலைத்து தேர்தலை எதிர்கொண்டார் சந்திரசேகர ராவ். வலுவான காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் கூட்டு சேர்ந்து மெகா கூட்டணி அமைத்த போதும் சந்திரசேகர் ராவ் மீண்டும் அபார வெற்றி பெற்றார். பின்னர் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் டிஆர்எஸ் கட்சி போட்டியிட்ட 17 இடங்களில் 9 இடங்களை வென்றது.

10 facts about the one and only Chief minister of Telangana Chandrashekar Rao

9. தேசிய அரசியலில் களமிறங்குவதற்காக கட்சியின் பெயரை தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியில் இருந்து பாரதிய ராஷ்டிர சமிதி என கடந்த ஆண்டு அக்டோபரில் பெயர் மாற்றினார் சந்திரசேகர் ராவ். பாஜக - காங்கிரஸ் அணிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை கட்டமைக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால், அவரது முயற்சிக்கு பலன் இல்லை.

10. இந்தச் சூழலில் தான், வரும் நவம்பர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறது கேசிஆரின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி. இன்று அங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் கேசிஆர் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கருத்துக்கணிப்புகளில் பிஆர்எஸ் வெற்றி பெற்று மீண்டும் கேசிஆர் ஆட்சி அமையும் எனக் கூறப்பட்டு வருகிறது. கருத்துக் கணிப்புகள் பலிக்குமா? தெலுங்கானாவின் 'ராஜா'வாக கேசிஆர் தொடருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+