போலீசை ஏமாற்ற.. கஞ்சாவை எங்கு மறைத்து வைத்து இருக்கிறார் பாருங்க.. வசமாக சிக்கிய இளைஞர்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் போதைப்பொருள் விற்பனை செய்த நபர் வீட்டுக்கு போலீசார் வருவதை அறிந்து கஞ்சாவை பூஜை அறையில் உள்ள இந்து கடவுள்களின் போட்டோவின் பின்னால் மறைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட போலீசார், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரின் கண்களில் மண்ணை தூவி போதைப்பொருள் வியாபாரிகள் அதனை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தற்போது தெலங்கானாவில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. போலீசார் வருவதை முன்கூட்டியே வந்த போதை வியாபாரி கஞ்சாவை மறைக்க செய்த செயல் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
தெலுங்கனா மாநிலம் ஹைதராபாத் தூள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரோஹன் சிங். இவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
வீட்டின் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பூஜை அறையில் இந்து கடவுள்களின் போட்டோவுக்கு பின்னால் நியூஸ் பேப்பரில் சுற்றி கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
ரோஹன் சிங்கின் வீட்டில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டுக்கு வந்து போலீசார் சோதனை செய்யப்பட உள்ளது பற்றி முன்கூட்டியே ரோஹன் சிங் அறிந்துள்ளார். இதையடுத்து அவர் கஞ்சாவை சாமி படங்களுக்கு பின்னால் மறைத்து வைத்துள்ளார். போலீசார் பூஜை அறை மற்றும் சாமி படங்களின் பின்னால் பார்க்க மாட்டார்கள் என்று ரோஹன் சிங் நினைத்தார்.
அதுமட்டுமின்றி அவர் போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அவர்கள் வரும்போது பூஜை செய்வது போல் நடித்துள்ளதும் அம்பலமாகி உள்ளது. ஆனால் போலீசார் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டு சாமி போட்டோக்களுக்கு பின்னால் மறைத்து வைக்கப்பட்ட கஞ்சாவை எடுத்தனர். மொத்தம் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ரோஹன் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரோஹன் சிங்கிற்கு ஒடிசாவில் இருந்து கஞ்சா கிடைத்ததும், அவர் அதனை ஹைதராபாத் மற்ம் காச்சிபவுலி உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செய்து விற்க முயன்றதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் நினைக்கின்றனர். அவர்களை தேடும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications