போதை பார்ட்டி! கோகைன் கஞ்சா தாராளம்.. சிக்கிய சிரஞ்சீவியின் தம்பி மகள்..மொத்தமாய் 142 விஐபிகள் கைது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் போதை பார்ட்டி நடப்பதாக கூறிய தகவலை வைத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகர் நாக பாபுவின் மகளுமான நிகாரிகா உள்ளிட்ட 142 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ரேடிசன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டல் பப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த பார்ட்டியில் கஞ்சா கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சமீபத்தில், என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளால் உயிரிழந்த நிலையில், தகவலறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

போதை பார்ட்டி

போதை பார்ட்டி

அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையில் விஐபிகள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் உட்பட 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போதை பார்ச்சியில் கோகோயின் மற்றும் கஞ்சா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகர் நாகபாபுவின் மகளுமான நிஹாரிகா கொனிடேலாவும் ஒருவர். பின்னர் நாகபாபு தனது மகளுக்கு போதைப்பொருள் பார்ட்டியில் எந்த தொடர்பும் இல்லை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

விஐபி வாரிசுகள்

விஐபி வாரிசுகள்

கைது செய்யப்பட்டவர்களில் பாடகரும், பிக் பாஸ் தெலுங்கு ரியாலிட்டி ஷோவின் மூன்றாவது சீசனின் வெற்றியாளருமான ராகுல் சிப்ளிகுஞ்சும் ஒருவர். பிப்ரவரி 12ஆம் தேதி ஹைதராபாத் காவல்துறை போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியபோது அவர் தீம் பாடலைப் பாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விருந்தில் இருந்த மற்றவர்களில் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு உயர் போலீஸ்காரரின் மகளும், அம்மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.பி.யின் மகனும் அடங்குவர்.

தெலுங்கானாவில் அதிர்ச்சி

தெலுங்கானாவில் அதிர்ச்சி

தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அஞ்சன் குமார் யாதவ், தனது மகன் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருப்பதாகவும், தனது மகன் குறித்துபொய்கள் மற்றும் அவதூறுகள் தவறாக பரப்பப்படுகின்றன என்றும் கூறினார். போதை பார்ட்டியை கண்காணிக்க தவறியதாக ஐதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த், பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஸ்டேஷன் அதிகாரி சிவ சந்திராவை சஸ்பெண்ட் செய்துள்ளார். அவருக்கு பதிலாக விசாரணை அதிகாரியாக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஒருவரின் மகளுக்குச் சொந்தமான ஹோட்டலில் உள்ள பப் விஐபிகள் மத்தியில் பிரபலமானது. இந்நிலையில் ரேடிசன் புளூ ஹோட்டலில் நடந்த இந்த சோதனையானது போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ள நேரத்தில் நடந்துள்ளதும், போதை பொருட்களை தடுக்கும் நோக்கில் ஹைதராபாத் - போதைப்பொருள் அமலாக்கப் பிரிவு அமைக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்துபவர்கள் அல்லது உட்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+