இருட்டுல நிக்காதே..க்கா.. பயமா இருக்கு.. என்கூட பேசிட்டே இரு.. 2019ஐ பதற வைத்த ஷாக் பலாத்காரம்!
ஹைதராபாத் பெண் டாக்டரின் பலாத்கார சம்பவம் அதிர வைத்துள்ளது
Recommended Video
ஹைதராபாத்: நிர்பயா கொலை சம்பவத்தை போலவே, நாடு முழுவதும் பெரிய தாக்கத்தையும், அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது தெலுங்கானா பெண் டாக்டர் பலாத்கார கொலை ஆகும்! இந்த வருடத்தின் மிக மிக மோசமான நிகழ்வுகளில் ஒன்றுதான் பெண் டாக்டரின் கொலை சம்பவமும், அதனையொட்டி நடந்த நிகழ்வுகளும்!
ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை டாக்டர்..வழக்கமாக கிளின் செல்ல டூவீலரில் கிளம்பி வந்துள்ளார்.
வண்டி ரிப்பேர் ஆகிவிடவும், ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல்கேட் அருகே நிற்க வைத்துவிட்டு, ஒரு வாடகை கார் பிடித்து கிளினிக் சென்றார்.. திரும்பி வந்து பார்த்தால் வண்டி பஞ்சர்.. அது இரவும் நேரமும் கூட.!

செல்போன்
அந்த சமயத்தில் ரொம்பவே பயந்து போயிருக்கிறார் டாக்டர்..அதனால் தன் தங்கைக்கு போன் செய்து பேசினார்.. "எனக்கு இங்கே இருட்டுல நிக்க பயமா இருக்கு..ம்மா" என்று சொல்ல, "ஓரமா நிக்காதே..க்கா.. ரோட்டோரம் வந்து வெளிச்சத்துல நில்லு" என்று தங்கை சொல்ல... "ரோட்டோரம் ராத்திரி நேரத்தில் நின்னா, பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க" என்று சொல்லும் பெண் டாக்டரின் குரலும், குணமும் அப்படியே நம் மனசில் பதிந்து விட்டது.

வன்கொடுமை
அப்போதுதான் 4 காமுகர்கள் வந்துள்ளனர்.. முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் 4 பேருமே டாக்டரை ஒதுக்குபுறத்துக்கு தூக்கி சென்றுள்ளனர்.. மாறி மாறி நாசம் செய்துள்ளனர்.. பாலியல் வன்கொடுமைக்கு பிறகு, டக்டர் தப்பித்து போய்விடக் கூடாது என்பதற்காக அவரின் கை, கால்களை கட்டியுள்ளனர்.

கூல்டிரிங்ஸ்
பிறகு வாயை பொத்தி தூக்கிச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக மதுகலந்த கூல்டிரிங்ஸ் கொடுத்துக் குடிக்கவைத்துள்ளனர். டாக்டர் மயக்கம் அடைந்தபிறகு அவரை லாரியில் ஏற்றி சம்பவம் நடந்த பாலத்துக்கு கொண்டு சென்றனர்.. பெட்ரோல் வாங்கிவந்து உடலை எரிக்கத் தொடங்கியுள்ளனர். உடம்பு நெருப்பில் பற்றி எரியும்போதுதான் தெரியுமாம்.. அந்த பெண்ணுக்கு உயிர் இருந்தது என்று.. அதுவரை அவர் இறந்துவிட்டார் என்றே 4 பேரும் நினைத்திருந்தார்களாம்.

வாக்குமூலம்
இதை வாக்குமூலத்தில் சொல்லும்போதுதான் அதிர்ச்சி அதிகமானது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஆரம்பத்தில் இவர்களுக்கு இல்லை.. ஆனால், போலீசில் புகார் தந்துவிடுவார் என்ற பயத்தினால்தான் கொலை வரை சென்றதாக சொன்னார்கள்.

பாதுகாப்பு
கொலையாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு விட்டாலும், இன்னமும் இந்த பெண்ணின் மரணமும், அந்த கொடூரமும் மக்கள் மனதை விட்டு அகலவே இல்லை.. ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு பெண் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பலப்படுத்துப்பட்டு வருகிறது என்பது நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications