Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூமில் வந்த "அலறல்".. மொத்தம் 4 மிருகங்கள்.. ரோட்டோரம் விழுந்த "துப்புரவு பெண்".. அதிர்ந்த ஆந்திரா

25 வயது பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திராவுக்கு என்னதான் ஆச்சு?.. இன்னொரு பெண்ணுக்கு சொல்ல முடியாத அளவுக்கு அக்கிரமம் நடந்துள்ளது.. இதுகுறித்து போலீசார், தங்கள் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்குதேசம் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்திருந்தது. தெலுங்குதேச கட்சியின் பொது செயலாளர் நர லோகேஷ் அப்போது ஒரு பேட்டி தந்திருந்தார்.

அதில், 'ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.. ஜெகன் மோகன் ஆட்சியில், திஷா சட்டத்தின் கீழ் 21 நாட்களில் தண்டனை என்ற உறுதிமொழிக்கு மாறாக நடந்து கொண்டிருக்கின்றன.

நிஜமா

நிஜமா

கூட்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை செய்யும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை மிரட்டி செல்கின்றனர்.. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 517 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என்று, ஆந்திர பிரதேச ஆட்சி குறித்து, தெலுங்குதேசம் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.. எதிர்க்கட்சிகள் இவ்வாறான குற்றச்சாட்டுகளை ஆளும்தரப்பு மீது அள்ளி வீசுவது இயல்பு என்றாலும், சமீபகாலமாக, நிஜமாகவே, ஆந்திராவில் பல வன்முறைகள் தலைதூக்கி வருகின்றன.

துப்புரவு பெண்

துப்புரவு பெண்

கல்வி நிறுவனங்களில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் பெருகி வருவதுடன், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே குறைந்து வருகிறது.. அதேபோல, பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.. நேற்றுகூட ஒரு கொடூரம் நடந்துள்ளது.. விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. 25 வயதாகிறது.. விஜயவாடா பெங்கி சர்க்கிளில் ஒரு புகழ்பெற்ற ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்

இந்த ஷாப்பிங் மாலில் துப்புரவு தொழிலாளியாக அந்த பெண் வேலை பார்த்து வருகிறார்.. சில நாட்களுக்கு முன்பு, இவருக்கு 25 வயதுடைய இளைஞர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.. அடிக்கடி இந்த ஷாப்பிங் மாலுக்கு அந்த இளைஞர் வந்துபோக ஆரம்பித்தார்.. இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் நைசாக பேசிய இளைஞர், அவரை கானூர் சனத் நகரில் உள்ள தன்னுடைய ரூமுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. ரூமிற்குள் நுழைந்ததுமே, அந்த பெண்ணுக்கு மது கலந்து தந்திருக்கிறார்.. அந்த பெண்ணும் அதை வாங்கி குடித்துள்ளார்..

விடிகாலையில்

விடிகாலையில்

சிறிது நேரத்தில், இளைஞர், தன்னுடைய நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து ரூமுக்கு வரவழைத்தார்... பிறகு 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, அந்த பெண்ணை அதற்கு பிறகு வெளியே விடவில்லை.. இப்படியே 3 நாள் அதே ரூமில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளனர்.. இதனால் 4வது நாளில் பெண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட துவங்கியது.. நேரம் ஆக ஆக, அவரது நிலைமை சீரியஸ் ஆனது.. இதைப்பார்த்து பதறிப்போன, 4 பேரும், அந்த பெண்ணை தூக்கி வந்து அங்குள்ள சாலையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

குற்றுயிர் குலையுயிர்

குற்றுயிர் குலையுயிர்

விடிகாலை நேரத்தில், அந்த வழியாக சென்றவர்கள் சாலையோரம் இளம்பெண் குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்து கிடப்பதை பார்த்து பதறிப்போய், பெனுமனூர் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.. ஆனால், அவரது நிலைமை மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தந்து வருகிறார்கள்.. இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்..

ஷாப்பிங் மால்

ஷாப்பிங் மால்

ஆனால் அதற்குள் 4 பேருமே எஸ்கேப் ஆகி உள்ளனர். அந்த பெண் வேலை பார்க்கும் ஷாப்பிங் மாலில் உள்ள கேமராவை ஆராயும் பணி நடந்து வருகிறது. அங்கு வந்த இளைஞரின் அடையாளம் தெரிந்தால்தான், மற்ற 3 பேரையும் பிடிக்க முடியும் என்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெண் யார்? அவரது குடும்ப என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள்.. இந்த சம்பவம் விஜயவாடாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+