ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கவர்ச்சி" தூண்டிலில்.. ஒரே நேரத்தில் சிக்கிய "பரிதாப" இளைஞர்கள்.. 8 மாதத்தில் ₹31.66.. இப்படியுமா?

திருமண மோசடி செய்து இளைஞர்களிடம் பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆசை காட்டி மோசம் செய்துள்ளார் ஒரு இளம்பெண்.. இதற்கு பலிகடாவான இளைஞர்கள் ஏராளமானோர் என்பதை போலீசார் கண்டறிந்து விசாரணையில் இறங்கி உள்ளனர்.

தொழில்நுட்பங்கள் பெருக பெருக, அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டதை மறுக்க முடியாது.. அதனால்தான், போலீஸார் பல்வேறு எச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு விடுத்து வருகிறார்கள்.

யாரையும் நம்பி மோசடியில் விழுந்துவிடாதீர்கள், அறிமுகம் இல்லாதவர்களிடம் அலர்ட்டாக இருங்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகிறார்கள். அப்படி இருந்தும் பலர் சிக்கி விடுகிறார்கள்..

பீலேவுக்கு தொப்பி... மெஸ்ஸிக்கு கருப்பு அங்கி! அப்போ புரியல இப்போ புரியுது.. இதுதான் காரணமா? பீலேவுக்கு தொப்பி... மெஸ்ஸிக்கு கருப்பு அங்கி! அப்போ புரியல இப்போ புரியுது.. இதுதான் காரணமா?

காஸ்ட்லி வாழ்க்கை

காஸ்ட்லி வாழ்க்கை

இதோ ஆந்திராவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பிரகாசம் மாவட்டம், கித்தலூரை சேர்ந்தவர் பராசா தனுஸ்ரீ.. இவருக்கு 27 வயதாகிறது.. அதேபகுதியை சேர்ந்தவர் பரசா ரவி தேஜா. இருவரும் காதலர்கள்... கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.. திடீரென காஸ்ட்லி வாழ்க்கை வாழ இருவரும் ஆசைப்பட்டார்கள்.. இதற்காக, சமூக வலைதளங்களை கையில் எடுத்தனர்.. போலி கணக்கு தொடங்கினார்கள்.. இளைஞர்களுக்கு குறி வைத்தார் தனுஸ்ரீ.. இன்ஸ்டாகிராமில் மொத்தம் 4 அக்கவுண்ட்களை திறந்து, அவைகளில் அழகான போட்டோக்களை பதிவிட்டார்..

புரொஃபைல்ஸ்

புரொஃபைல்ஸ்

பிறகு, வீடியோக்களையும் பதிவிட்டார்.. இதனால் மிக குறுகிய காலத்தில் அவரின் புரோஃபைலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை எகிறிகொண்டே போனது.. அதில் யாரெல்லாம் கமெண்ட் செய்கிறார்களோ, அவர்களில் சிலரை தனுஸ்ரீ தேர்ந்தெடுப்பாராம்.. அவர்களுக்கு ரிப்ளை செய்வது போல், நைசாக பேசி, அவர்களின் போன் நம்பரையும் வாங்கி கொள்வாராம்.. பிறகு, இனிப்பு வார்த்தைகளாய் தன் காதலை அள்ளி வீசுவாராம்.. இப்படியே பேசி பேசியே, அந்த இளைஞர்களை, கல்யாணம் வரை பேச்சை கொண்டு போய்விட்டுவிடுவார்..

கிளைமாக்ஸ்

கிளைமாக்ஸ்

க்ளைமேக்ஸில், "என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, சிகிச்சைக்கு பணம் வேண்டும்.. வீட்டுக்கடன் கட்ட வேண்டும்.. கொரோனா தொற்றால் வேலை கிடைக்கவில்லை" என்று சொல்லியே பணம் கறக்க ஆரம்பித்துவிடுவார். அதாவது, இப்படிபொய் பொய்யாக சொல்லியே, வெறும் 8 மாதங்களில் 31.66 லட்சத்தை ஏமாற்றி இளைஞர்களிடம் பெற்றுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இப்படித்தான், ஒரு நாள் தனுஸ்ரீயிடம் தெலங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கிவிட்டார்.. வழக்கம்போல் காதல் வார்த்தைகள் பேசி, கல்யாணம்வரை அந்த இளைஞரை கொண்டுவந்துவிட்டார்.. ஆனால், தனுஸ்ரீ தன்னுடைய வேலையை காட்டவும், சந்தேகம் அடைந்த இளைஞர், ஹைதராபாத் ராச்சகொண்டா சைபர் கிரைம் போலீசுக்கே போய்விட்டார்.. புகாரும் தந்தார்..

பித்தலாட்டம்

பித்தலாட்டம்

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டனர்.. தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தனுஸ்ரீ செய்த பித்தலாட்டங்கள் அம்பலமாயின.. இதற்கெல்லாம் பின்னணியில் காதலன் ரவிதேஜா இருப்பதும் தெரியவந்தது. இருவரிடம் இருந்தும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. அந்த செல்போன்களை ஆய்வு செய்தபோது, இதுவரை பல இளைஞர்களை, ஆசை காட்டி மோசம் செய்து தனுஸ்ரீ ஏமாற்றி இருப்பது போலீஸுக்கு தெரியவந்தது. இருவரையும் கைது செய்து ஜெயிலுக்குள் தூக்கி வைத்துள்ள போலீஸார், அடுத்தக்கட்ட விசாரணையிலும் இறங்கி உள்ளனர்.

English summary
27 year old woman cheating and duo held for marriage alliance fraud on social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X