15 நிமிடங்கள்.. 30 - 35 முறை நடந்த கொடூரம்.. கையில் விழுந்த கணவனின் மூளை.. வெடித்து அழும் சுல்தானா

இந்து நபரை வெட்டி கொன்ற முஸ்லிம் குடும்பத்தினர் வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த பெண் கதறி அழும் காட்சி காண்போரை உலுக்கி எடுத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ.. 26 வயதாகிறது.. இந்து மதத்தை சேர்ந்தவர்..

இவரும், அதே பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும், பள்ளி பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர்.

 பள்ளி பருவம்

பள்ளி பருவம்

பல வருட காதல் இது.. ஒருகட்டத்தில் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.. இதனால், எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி 31-ம் தேதி நாகராஜூ - சுல்தானா இருவருமே திருமணம் செய்துகொண்டனர். எப்படியும் தங்களை குடும்பத்தினர் கொன்றுவிடுவார்கள் என்று பயந்து, தம்பதி இருவரும் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இருந்து வெளியேறி ஐதராபாத்தின் சரோன் நகரில் குடியேறினர்.. எதிர்பார்த்ததுபோலவே, பெண் வீட்டில் இவர்களை தேட ஆரம்பித்தனர்..

 கொலை வெறி

கொலை வெறி

முக்கியமாக பெண்ணின் அண்ணன் முகமது, நாகராஜு மீது கொலைவெறி தாக்குதலில் இருந்தார்.. இந்த ஜோடி எங்கே இருக்கிறது என்று தேடி கொண்டே இருந்தார்.. ஒருகட்டத்தில், சரோன் நகரில் இவர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை இரவு பைக்கில் சரோன் நகருக்கு சென்றார்.. அப்போது பைக்கில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் சுல்தானாவும் நாகராஜூவும் சென்றபோது, அந்த பைக்கை முகமது இடைமறித்துள்ளார்..

சிசிடிவி

சிசிடிவி

பிறகு மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் நாகராஜூவின் தலையில் பயங்கரமாக தாக்கவும், நாகராஜூ அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். இது தொடர்பான சிசிடிவிதான் வெளியாகி உள்ளது.. கணவனை தன்னுடைய அண்ணன், முகமது இரும்பு கம்பியால் தாக்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த சுல்தானா தாக்குதலை தடுக்க முயற்சித்துள்ளார்.

வீடியோ

வீடியோ

ஆனால், முகமதுவும், அவரது உறவினருமான மசுத் அகமதுவும் சுல்தானாவை தள்ளிவிட்டு நாகராஜூவை இரும்பு கம்பியால் மறுபடியும் மறுபடியும் தாக்கி உள்ளதும், கத்தியால் பலமுறை குத்தி கொன்றதும், அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது... இதை கண்ணெதிரே பார்த்த மக்கள் தலைதெறித்து ஓடுகிறார்கள்.. ஒருசிலர் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்தாலும், நடந்த சம்பவத்தை தடுக்கவில்லை.. இத்தனைக்கும் சுல்தானா அங்கிருந்தோரிடம் ஓடிச்சென்று, தன் கணவனை காப்பாற்றுமாறு கெஞ்சுகிறார்.. ஆனாலும் யாருமே மனம் இரங்கவில்லை.

 கதறி அழுதார்

கதறி அழுதார்

நடந்த சம்பவம் பற்றி சுல்தானா கண்ணீருடன் சொல்லும்போது, மெயின் ரோட்டிலேயே என் கணவனை அடித்து கொன்றார்கள்.. அங்கிருந்த யாரும் முன்வரவே இல்லை... எல்லாரிடமும் உதவி கேட்டேன்.. என் கணவரின் உயிர்போகும் வரை தாக்கியது என்னுடைய அண்ணனும், அவனது நண்பர்களும்தான்.. சட்டப்படி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கதறி அழுகிறார். பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிறைய பைக்குகள் எங்கள் முன் வந்து நின்றன..

 இரும்பு கம்பி

இரும்பு கம்பி

அதில் ஒன்றில் என் அண்ணன் இருக்கிறான் என்று எனக்கு தெரியாது.. இரும்பு கம்பியால் தாக்கியபோதுதான் தெரிந்தது.. உடனே என் கணவரை காப்பாற்ற ஓடினேன்.. அவர்கள் என்னையும் கீழே தள்ளிவிட்டனர்.. அப்போதுதான் அங்கிருந்தோரிடம் உதவி கேட்டு கெஞ்சினேன்.. அவர்களோ, செல்போனில் நடப்பதை எல்லாம் வீடியோ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்தனர்... 15 நிமிஷத்தில் 30 முதல் 35 முறை என் கணவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.. அதிலும் மூளையிலேயே தாக்கினர்..

மூளை

மூளை


அவர் இறந்ததுமே, நான் அவரின் தலையின் மீது கை வைத்தேன், அப்போது என் கை நேரடியாக அவரின் மூளையை தொட்டது.. அதற்கு பிறகு அவரின் அவரின் மூளை அப்படியே என் கையில் வந்து விழுந்து விட்டது. என் கணவர் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என நினைத்து இருந்தேன். ஆனால் என் கணவர் உயிரிழந்ததற்கு அவர்கள் கஷ்டப்பட வேண்டும்.. இன்னமும் மதம் இப்படி ஆட்டி படைக்கிறதே? உதவி என்று கேட்டு இந்த சமுதாயத்திடம் கேட்டு, என் நேரத்தை வீணாக்கிட்டேனே" என்று கதறி அழுகிறார் சுல்தானா..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+