குபீர் என பற்றிய தீ... சிக்கிய பாஜக தொண்டர்கள்.. 9 மாத குழந்தைக்கான ஆர்ப்பாட்டத்தில் விபரீதம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாஜகவினர் போராட்டத்தின் போது திடீரென பற்றிய தீ -வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 9 மாத பெண் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, வாரங்கலில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது உருவபொம்மையை எரிக்க சிலர் முற்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள அனுகோண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகன். இவரது மனைவி அர்ச்சனா. இந்த தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை சிரிதா இருந்தாள். இவர்கள் அந்த பகுதியில் தாபா ஒன்று நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 19ம் தேதி இரவு தாபாவின் மாடியில் தங்களது ஒன்பது மாத குழந்தை சிரிதாவுடன் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

    4 BJP workers injured while burning an effigy in Warangal today

    இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென கண்விழித்து பார்த்த தம்பதி, குழந்தையை காணாது கண்டு தவித்தனர். இதனால் அதிர்ச்சியுடன் குழந்தையை பல இடங்களில் தேடி ஜெகன் அலைந்தார். அவரது மனைவி அர்ச்சனாவும் ஒருபக்கம் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அனுகோண்டாவின் டைலர் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஓடிச்சென்று பார்த்த ஜெகன் தன் குழந்தையை பிரவீன் என்ற இளைஞர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது.

    ஜெகன் அங்கு வருவதை பார்த்த பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதற்கிடையே பிரவீனை தேடிக்கண்டுபிடித்த அப்பகுதி பொதுமக்கள், அவனை அடித்து உதைத்து அனுமகொண்டா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தெலுங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பத்தை பார்த்து இந்தியா முழுவதுமே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து, தெலுங்கானாவில் மாநில அரசை கண்டிதது பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. வாரங்கல்லில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அப்போது சிலர் உருவபொம்மையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். அப்போது குபீரென பற்றிய தீ ஆர்ப்பாட்டக்கார்கள் மீது பற்றி எரிய தொடங்கியது. இதில் பாஜகவினர் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீசின் வாகனம் ஒன்றும் சேதமாகியுள்ளது. இதற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+