"கழுதைக்கறி" சாப்பிட்டால் ஆண்மை பெருகுமா.. மொத்தம் 400 கிலோவாம்.. ஆந்திராவில் என்ன நடக்குது
கழுதைக்கறி சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்ற தகவல் ஆந்திராவில் பரவி உள்ளது
ஹைதராபாத்: கழுதைக்கறியை சாப்பிட்டால் ஆண்மை பெருகும் என்ற தகவல் ஆந்திர மாநிலத்தில் பெருமளவு வட்டமடித்து கொண்டிருக்கிறது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை கறியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.. இதற்கு அரசு தடையை விதித்த போதிலும்கூட, கழுதைக்கறிக்கான மவுசு அங்கு குறையவில்லை.
சட்ட விரோதமாக கழுதைகளை கடத்தி வந்து, அதை கொன்று, கழுதைக்கறியை விற்பனை செய்து வருகின்றனர்.. இதற்கு சில காரணங்களையும் அம்மக்கள் சொலகிறார்கள்.

ஆண்மை
கழுதை கறி சாப்பிட்டால், உடல் வலிமைப்பெறும் என்றும், சுவாச பிரச்சனைகளை இது குணப்படுத்த முடியும் என்றும் நம்புகிறார்கள்.. முக்கியமாக ஆண்மை சக்தியை அதிகரிக்கும் என்ற பேச்சு வலுவலக உள்ளது.. அதனாலேயே, இந்த கழுதைக்கறிக்கு டிமாண்டு அதிகம்.. கழுதை வெட்டப்படும் இடங்களிலேயே, இந்த கறியை வாங்க போட்டி போடுவார்களாம்.. பெரும் தள்ளுமுள்ளுக்கிடையில்தான், போட்டுக் கொண்டு கறி வாங்கி போவார்களாம்.. ஒரு கிலோ கறி ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

400 KG
இந்த கறிக்காக, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கழுதைகள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன... ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில், கழுதைக்கறிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்கிறார்கள்.. இந்த கடைகள் குறித்து விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.. போலீசாரும், அந்த புகாரின் பேரில் பாபட்லா மாவட்டத்தில் 4 இடங்களில் சோதனை நடத்தினர்.. அப்போது, கழுதைகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில், அதன் கறிகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதை நேரடியாக கண்டனர்.

கழுதை கறி
இதையடுத்து, கறி விற்பனை செய்து கொண்டிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்... மொத்தம் 400 கிலோ கழுதைக்கறியும் பறிமுதல் செய்யப்பட்டது... இந்த இடத்தைதவிர, உசிலிப்பேட்டையில் 2 இடங்களிலும், வேடபாலத்தில் ஒரு இடத்திலும், சிராலா ஒரு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களிலும் சோதனைகள் அடுத்தடுத்து நடந்தன.. கைதானவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..

கழுதைக்கறி
இதற்கெல்லாம் கடுமையான தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.. காரணம், கழுதைகளை வெட்டி அறுப்பது சட்டத்தை மீறும் செயல் என்பதால், எப்படியும், இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.. உணவுப் பாதுகாப்புச் சட்டபடி, கழுதை இறைச்சி சாப்பிடுவதும் சட்டவிரோதமானதுதான்.. அதனால், யாரும் கழுதைக்கறியை வாங்கி சாப்பிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

தேய்ந்த கழுதை
கழுதை கறியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கை காரணமாகவே, இவர்கள் இந்த கறியை சாப்பிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. தற்போதெல்லாம் நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைத்து வருகிறது... மத்திய அரசின் கால்நடை துறை புள்ளி விபரங்கள் அடிப்படையில், 1952-ல், 13 லட்சமாக இருந்த கழுதைகள் எண்ணிக்கை 2020-ல் ஒரு லட்சமாகக் குறைந்துள்ளது. இது, இப்போது லட்சத்துக்கு கீழ் இறங்கிவிட்டது... தமிழகத்தில், 2007-ல் 4,775 ஆக இருந்த கழுதைகள் எண்ணிக்கை, இப்போது வெறும் 1,400-க்கும் கீழ் வந்துவிட்டது. அழிவுக்குள்ளான உயிரினங்கள் லிஸ்ட்டில் கழுதையும் சேர்ந்துவிட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பார்கள்.. ஆனால், கழுதையே தேய்ந்து கொண்டு வருவது அதிர்ச்சியும் வேதனையையும் தந்து வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications