இன்னொருவருடன் கள்ள காதலி.. ஆவேசத்தில் 5 வயது சிறுமியை அறுத்து கொன்ற காதலன்.. தெலுங்கானாவில் பரபரப்பு

5 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்றுள்ள நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கள்ளக்காதலி வீட்டுக்குள் நுழைந்தார் காதலன்.. ஆனால் அங்கே இன்னொரு காதலன் இருப்பதை பார்த்து ஆவேசம் ஆகிவிட்டார்.. அந்த ஆத்திரத்தில் ஏதுமறியாத 5 வயது சிறுமியை பிளேடால் கழுத்தை அறுத்து கொன்று, மற்றொரு நபரையும் கொல்ல முயன்று, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவருக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள்.. இந்நிலையில் ஒருவருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.. ஒருவருக்கொருவர் ஜாலியாகத்தான் இருந்துள்ளனர்.. நாளடைவில் அந்த பெண், காதலனை தவிர்க்க ஆரம்பித்துள்ளார்.

5 year old girl killed by her mothers lover near telangana

இது காதலனுக்கு மன சங்கடத்தை தந்தது.. எதனால் தன்னை ஒதுக்குகிறாள்.. ஏன் தன்னை வேண்டாம் என்கிறாள் என்று புரியாமலேயே இருந்தது.. அதேசமயம், கள்ள காதலியை பிரியவும் மனமில்லை.. அதனால் அவரது வீட்டிற்கு சென்று காரணத்தை கேட்கலாம் என்று சென்றுள்ளார்.

அங்கே போனால், இன்னொரு நபரை வீட்டிற்குள் வரவழைத்து ஜாலியாக இருந்துள்ளார் பெண்.. இதை பார்த்ததும் காதலனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.. காரணம், அந்த நபர், இவருக்கும் நண்பராம்.

அந்த கோபத்தில் ஒரு பிளேடை எடுத்து, சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளார்... 2வதாக அந்த நபரையும் பிளேடால் கொலை செய்ய முயன்றுள்ளார்.. பிறகு அந்த பெண்ணையும் தாக்கி உள்ளார்.. கடைசியாக அதே பிளேடில் தானும் தற்கொலை செய்துக்கொள்ள கழுத்தில் கீறி கொண்டார்.

சிறுமி, அந்த நண்பரின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து அனைவரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.. ஆனால் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டாள்.. தகவலறிந்து போலீசாரும் விரைந்து வந்துவிட்டனர்.. உள்ளூர்வாசிகளிடம் விசாரணை நடத்தினர்.. அப்போதுதான் இந்த கள்ளக்காதலர்களின் விவகாரம் வெளியே வந்தது.

2 பேருடன் கள்ளக்காதல் இருந்தது என்பதை அந்த தாயும் ஒப்புக் கொண்டார்.. இப்போது படுகாயமடைந்தவர்கள் ஆளுக்கு ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கள்ள காதலால் நடக்கும் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன... பண்பாட்டு, கலாச்சாரத்தினால் பின்னி பிணைந்த புனித உறவுகள் வரிசையாக நொறுக்கப்பட்டு வருகின்றன... குறிப்பாக, எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் இதில் பாதிக்கப்படுவதும், அநியாயமாக கொல்லப்படுவதும் ஏற்கவே முடியவில்லை.. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதே சமுதாயம் சீருடன் தழைக்க வழிகிடைக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+