அமித்ஷா பிரகடனம் செய்த இறுதி யுத்தம்.. தெலுங்கானாவில் கடும் சண்டை- 6 மாவோயிஸ்டுகள் அழித்தொழிப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பத்ராரி கொத்தகுடெம் என்ற பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதலில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்தீஸ்கரைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டை தீவிரமாகி உள்ளது.
நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டில், 40 ஆண்டுகளில் முதல் முறையாக, இடதுசாரி வன்முறையால்- மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 100-க்கும் கீழே குறைந்தது. 2010-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், அதாவது 1005 என பதிவான நிலையில், 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 138 ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அண்மையில் நடைபெற்ற இடதுசாரி தீவிரவாதம் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது என்று கூறினார். வலுவான உத்தி, சமரசமற்ற அணுகுமுறையுடன் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். 2026 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளை தேடித் தேடி அழிக்கும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சத்தீஸ்கரில் கடந்த சில நாட்களாக 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களது சடலங்கள் கைப்பற்றப்பட்டு தண்டேவடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ஆந்திரா, தெலுங்கானாவிலும் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையின் போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதல் சில மணிநேரங்கள் நீடித்தன. இம்மோதலில் மொத்தம் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி இருவர் படுகாயமடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications