7வயது சிறுமி, 4 நாட்கள் பாத்ரூமுக்குள்.. தண்ணீர் மட்டும் குடித்து உயிர் பிழைத்த கதை
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பக்கத்து வீட்டு பாத்ரூமுக்குள் தவறி விழுந்த, 7வயது சிறுமி அங்கிருந்த தண்ணீரை குடித்து 4 நாள்கள் உயிருக்கு போராடிய இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவின் நாராயணபேட் மாவட்டத்தில் உள்ள மேக்தல் நகரத்தில் குரவகச்சேரி அகிலா(7வயது) என்ற சிறுமி, அங்கு உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது வீட்டின் மேல் தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி பக்கத்து வீட்டு பாத்ரூமுக்குள் கடந்த 20ம் தேதி விழுந்தார்.

பூட்டப்பட்ட வீடு
பக்கத்து வீட்டு குளியலறையின் மேல் போடப்பட்டிருந்த தகரசீட் உடைந்ததால் மாணவி பாத்ரூமுக்குள் விழுந்துவிட்டார். ஆனால் உள்ள விழுந்ததில் அவருக்கு காயங்கள் ஏற்படவில்லை. அவர் யாராவது காப்பாற்றுங்கள என பலமுறை குரல் எழுப்பியும் அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை. அந்த வீட்டின் ஓனரும் வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்றுவிட்டார்.

தண்ணீர் குடித்து
இதனால் மாணவி அகிலாவை யாருமே வெளியில் மீட்க முடியவில்லை.இதனால் மாணவி அகிலா பத்ரூம் பைப்பில் வந்த தண்ணீரை மட்டும் குடித்தபடி 4 நாள்கள் உயிருக்கு போராடி உள்ளார்.

போலீஸ் தேடுதல்
இதற்கிடையே மாணவி அகிலாவின் பெற்றோர், மேக்தல் நகர போலீசில் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். போலீசார் தனிப்படை அமைத்து மாணவியை தேடிவந்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க போலீசாரால் முடியவில்லை.

அதிர்ச்சி
இதனிடைய 4 நாள்கள் கழித்து மாணவி அகிலா தவறிவிழுந்த வீட்டின் ஓனர் ஊர் திரும்பி வீட்டை திறந்துள்ளார். அங்கு பாத்ரூம் செல்ல அவர் முயன்றபோது மாணவி மயங்கி நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மாணவி உயிர்பிழைப்பு
இதையடுத்து அக்கம் பக்கத்தினருக்கு அவர் தகவல் கொடுத்தார். மாணவியை மீட்டு முதலுதவி செய்த அவர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாணவிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாத்ரூமில் சிக்கிய சிறுமி, அங்கு பைப்பில் வந்த தண்ணீரை குடித்து நான்கு நாள்கள் சிறுமி போராடி உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications