ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேலே இருந்து பறந்து வந்த கார்.. நடந்து சென்ற பெண் பரிதாப பலி.. ஹைதராபாத் திகில்.. திக் திக் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிவேக கார் நொறுங்கி பெண் உயிரிழப்பு ( வீடியோ )

    ஹைதராபாத்: எல்லாமே இயல்பாக நடந்து கொண்டிருந்தது. சாலையோர நடைபாதையில் நடந்து செல்லும் பெண் உட்பட அனைத்தும் அங்கே இயல்பாகவேத்தான் இருந்தது. ஆனால் வானத்திலிருந்து ஒரு கார் பறந்து வந்து விழும்வரை. அந்த பெண் துடிதுடித்து இறக்கும்வரை.

    ஆம்.. இப்படி ஒரு பயங்கர சம்பவம் இன்று ஹைதராபாத்தின் ஹச்சிபவ்ளி என்ற இடத்தில் நடந்துள்ளது. இந்த திக்.. திக்.. காட்சி அப்பகுதியிலுள்ள சிசிடிவியில் வீடியோவாக பதிவாகியுள்ளது.

    கடந்த 4ம் தேதிதான், 1 கிலோ மீட்டர் நீளமுள்ள பயோடவர்சிட்டி பாலம் என்றழைக்கப்படும் பாலம் இங்கே திறந்து வைக்கப்பட்டது.

    சினிமா மாதிரி

    சினிமா மாதிரி

    இந்த பாலத்துக்கான செலவு ரூ.69.47 கோடி. ஆனால், பாலம் நேர்த்தியாக கட்டமைக்கப்படவில்லை. ரொம்பவே ஷார்ப்பான வளைவுகள், நெளிவுகள் இருக்கின்றனவாம். அறிவிப்பு பலகைகளும் சரியான இடங்களில் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில்தான், இன்று மதியம் சரியாக 1 மணிக்கு, வோல்க்ஸ்வேகன் ஜிடிஐ வகை கார் ஒன்று இந்த பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென அது ஓட்டியவரின், கட்டுப்பாட்டை இழந்து, ஹச்சிபவ்ளி என்ற பகுதியில், பாலத்திலிருந்து கீழே பாய்ந்து வந்தது. சினிமா படங்களில் பார்ப்போமே, அப்படி அந்த கார் பறந்து வந்து கீழே விழுந்தது.

    நடந்து சென்ற பெண்

    நடந்து சென்ற பெண்

    கீழே விழுந்த வேகத்தில் அங்கேயிருந்த மரத்தில் மோதி, அந்த மரமே வேரோடு சாய்ந்தது. இதைவிட பெரிய கொடுமை, அங்கே நடந்து சென்று கொண்டிருந்த அப்பாவி பெண் ஒருவர் கார் மோதியதில் நசுங்கி பரிதாபமாக இறந்துள்ளார். காரை ஓட்டியவர் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் என மொத்தம் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

    சிசிடிவி காட்சிகள்

    கார் விழுந்த சத்தம் கேட்டு, அப்பகுதியிலுள்ளவர்கள் ஓடிவந்து, பார்த்து, அடிபட்டவர்களை காப்பாற்றியுள்ளனர். இது அத்தனையும், சிசிடிவியில் வீடியோவாக பதிவாகியுள்ளது. பாலத்தின் மேலே வாகனங்களில் சென்றவர்களும், வாகனங்களை நிறுத்திவிட்டு கீழே எட்டிப் பார்த்துள்ளனர். இதனிடையே விபத்தில் உயிரிழந்த அந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை, ஹைதராபாத் மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.

    மக்கள் அச்சம்

    இந்த பாலம் திறக்கப்பட்ட பிறகு, நடைபெற்ற 2வது பெரிய விபத்து இதுவாகும். எனவே மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பாலத்தை அதிகம் பயன்படுத்துவது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர்தான். பல முக்கிய நிறுவனங்களை இந்த பாலம் இணைக்கிறது. இந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு பாலம் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

    English summary
    A car after losing control falls from flyover located at Biodiversity Junction, Raidurgam in Hyderabad; one pedestrian has lost her life in the incident, car driver and 5 others receive injuries, Case registered.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X