ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக முக்கிய தலைவர் ஹைதராபாத்தில் தூக்கிட்டு தற்கொலை! என்ன காரணம்! தீவிரம் காட்டும் போலீசார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலங்கானாவில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானாவில் இப்போது சந்திரசேகர ராவ் தலைமையிலான டிஆர்எஸ் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் இங்கு ஆட்சியைப் பிடிக்கப் போராடி வருகிறது.

அடுத்தாண்டு இறுதியில் இங்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்குத் தயாராகும் பணிகளை இங்கு அனைத்து கட்சிகளும் சத்தமின்றி மேற்கொண்டு வருகிறது.

வேலி தாண்டிய ஆடு! அதிமுக- திமுக- பாஜக! சென்னை மாநகராட்சி கவுன்சிலரை தூக்கிய அண்ணாமலை! ட்விஸ்ட் தான்!வேலி தாண்டிய ஆடு! அதிமுக- திமுக- பாஜக! சென்னை மாநகராட்சி கவுன்சிலரை தூக்கிய அண்ணாமலை! ட்விஸ்ட் தான்!

தற்கொலை

தற்கொலை

இந்தச் சூழலில் ஐதராபாத்தில் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநில பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரும் அக்கட்சியின் முக்கிய மாநில தலைவர்களில் ஒருவருமான ஞானேந்திர பிரசாத் நேற்று தற்கொலை செய்து கொண்டதாகத் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது அம்மாநில பாஜகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார்

போலீசார்

ஹைதராபாத்தில் மியாபூர் பகுதியில் வந்த ஞானேந்திர பிரசாத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். தனது இல்லத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவர் தூக்கிட்டுள்ளார். இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 என்ன காரணம்

என்ன காரணம்

அவருக்குச் சமீபத்தில் தான் விபத்தில் கால் எழும்பு உடைந்து இருந்தது. இதனால் பொது நிகழ்ச்சிகளிலும் சரி கட்சி நிகழ்ச்சிகளிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. தொடர்ந்து வீட்டிலேயே முடங்கி இருந்ததால், அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. களைப்பாக உள்ளதால் தன்னை சொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது உதவியாளரிடம் கூறிவிட்டு, அவர் அறைக்குச் சென்றுள்ளார். இதனால் உதவியாளர் வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

காலை நீண்ட நேரம் ஆனதால், உணவு கொடுக்க அறையைத் தட்டி உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்காததால் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளனர். அப்போது தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டறியப்பட்டது. ஞானேந்திர பிரசாத் குடும்பத்தினருக்கும் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அவருக்கு எந்தவொரு கடனும் இல்லை என்றும் அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என்றும் ஞானேந்திர பிரசாத் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

English summary
Telangana BJP senior leader Gyanendra Prasad died by suicide: (ஹைதராபாத்தில் பாஜக மூத்த தலைவர் தூக்கிட்டு தற்கொலை) Telangana BJP latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X