32 அடி பள்ளம்.. தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பஸ்.. துடிதுடித்த பயணிகள்.. 7 பேர் பலி.. ஆந்திராவில் சோகம்!
ஐதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அரசு ஏசி சொகுசு பஸ் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் அங்குள்ள சாகர் கால்வாயில் கவிழ்ந்தது. இதில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 18க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தர்ஷி - பொதிலி சாலையில் அரசு ஏசி சொகுசு பஸ் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலை ஓரம் இருந்த சாகர் என்ற கால்வாயில் பஸ் கவிழ்ந்தது. சுமார் 32 அடி ஆழமுள்ள அந்த கால்வாயில் பஸ் கவிழ்ந்ததால் உள்ளே இருந்த பயணிகள் படுகாயமடைந்து அலறி துடித்தனர்.

இதையடுத்து பஸ் விபத்து குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிரேன் உதவியுடன் பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். எனினும் இந்த பஸ் விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றதாகவும், அப்போது தான் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் கவிழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் பயணிகளுடன் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 7 பயணிகள் பலியாகியது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications