தொடங்கிய ஆட்டம்.. காங்கிரஸ் வேட்பாளர்களை இழுக்கும் கேசிஆர்? தெலங்கானா விரைந்த டிகே சிவக்குமார்
ஹைதராபாத்: தெலங்கானா சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை முதல்வர் சந்திரசேகரராவ் தொடர்பு கொண்டு தனது கட்சிக்கு இழுப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை ‛காப்பான்' என அழைக்கப்படும் டிகே சிவக்குமார் அங்கு விரைந்துள்ளார்.
தெலங்கானாவில் 2 சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. கடந்த 2014, 2018 ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் (முன்பு டிஆர்எஸ்) கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து 2 முறையும் சந்திரசேகரராவ் முதல்வராக பொறுப்பேற்று 10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த மாதம் 30ம் தேதி 3வது முறையாக தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. 71 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இந்த ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தெலங்கானாவை பொறுத்தமட்டில் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக மற்றும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி இடையே நான்கு முனை போட்டி உள்ளது. இதில் ஆட்சியை பிடிப்பதில் பிஆர்எஸ்-காங்கிரஸ் இடையே தான் போட்டி உள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளன. இந்த முறை காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. இதனால் சந்திரசேகரராவின் ஹாட்ரிக் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது.
இந்நிலையில் தான் தெலங்கானாவில் வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை இழுக்க முதல்வர் சந்திரசேகரர் ராவ் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு அவர் சில காங்கிரஸ் வேட்பாளர்களை தொடர்பு கொண்டுள்ளதாக பரபரப்பான புகார் கிளம்பி உள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரேணுகா சவுத்ரி தன்னிடம் பிஆர்எஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி அந்த கட்சியில் சேர வலியுறுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தான் நாளை கவுண்ட்டிங் நடக்கும் நிலையில் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். தெலங்கானாவில் வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை சந்திரசேகரராவ் தொடர்பு கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயலும்போதெல்லாம் டிகே சிவக்குமார் தான் கர்நாடகா அழைத்து சென்று பாதுகாக்கும் இந்த டிகே சிவக்குமார் தற்போது தெலங்கானா விரைந்துள்ளார். இதுபற்றி டிகே சிவக்குமார் கூறியதாவது:
தெலங்கானாவில் ஆட்சியமைக்க ஆதரவு தரும்படி முதல்வர் சந்திரசேகரராவ் தங்களிடம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேலையை பிஆர்எஸ் கட்சி செய்யும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதோடு கேசிஆரே நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாக வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நான் அங்கு செல்கிறேன்.
இது எனது கட்சி பணி. கர்நாடகா தேர்தலின்போது தெலங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் இங்கு (கர்நாடகா) இருந்தனர். இதனால் நான் அங்கு செல்ல உள்ளேன். ரிசல்ட்டுக்கு பிறகு அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். எங்களை பொறுத்தமட்டில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறும்'' என தெரிவித்தார். மேலும் அவர் கர்நாடகாவில் இருந்து தெலங்கானா புறப்பட்டு செல்ல உள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications