ஆந்திராவில் 3 தலைநகரம்.. விவசாயிகளுக்கு 16 ஆயிரம்.. தெறிக்கவிட்ட ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கை!
ஹைதராபாத்: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரசின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ஆந்திராவில் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை 16,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்டவற்றை தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆந்திராவில் வரும் மே 13 ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் அம்மாநில சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள 175 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போது ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய் எஸ் ஷர்மிளா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவாராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், சொந்த அண்ணனை எதிர்த்து அரசியலில் நேரடியாக மோதுகிறார் ஒய் எஸ் ஷர்மிளா.
ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், ஆட்சியை தக்க வைப்பதில் ஜெகன் மோகன் ரெட்டி தீவிரம் காட்டி வருகிறார். அனல் பறக்கும் பிரசாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட்டுள்ள நிலையில், இன்று தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியை ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருப்பதாவது:-
ஆந்திராவில் விசாகப்பட்டினம், அமராவதி, கர்னூல் என மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும். விசாகப்படினம் அரசின் எக்சிகியூட்டிவ் கேபிடலாக இருக்கும். மாநிலத்தின் வளர்ச்சி என்ஜினாக அமராவதி இருக்கும். அமராவதி சட்டமன்ற தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும். விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 13 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.16 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கதப்படும்.
பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும். முதியவர்களுக்கன பென்ஷன் தொகை மாதம் 3 ஆயிரத்தில் இருந்து 3,250 - ஆக 2028 ஜனவரியில் உயர்த்தப்படும். 2029-ல் ரூ.3,500 ஆக உயர்த்தப்படும். பெண்களுக்கான அம்மோ வோடி திட்ட பயணிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரத்தில் ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும்." என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, "மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை பெண்களுக்கு, 800 சதுர அடியில் இலவசமாக வீடு கட்டி தரப்படும். முதியோர் உதவித் தொகை மாதம் 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications