'இதை சாப்பிட்ட ஓமிக்ரான் கூட ஓடிடும்..' ஆந்திராவில் நாட்டு மருத்துவர் செயலால் சலசலப்பு.. போராட்டம்!
ஹைதராபாத்: நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒருவர் தன்னால் ஓமிக்ரான் பாதிப்பையும் குணப்படுத்த முடியும் எனக் கூறி வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே ஒட்டுமொத்த உலகை அலறவிடுவது என்றால் அது ஓமிக்ரான் தான். தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான் உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஓமிக்ரான்
இன்றைய தினம் வரை இந்தியாவில் 781ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 21 மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாகத் தலைநகர் டெல்லியில் 238 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மகாராஷ்டிராவில் 167 பேருக்கு ஓமிக்ரான் கேஸ்கள் உறுதியாகியுள்ளது. கொரோனாவுக்கு பல வகை தடுப்பூசி உள்ள போதிலும், எந்த வகையான கொரோனாவுக்கும் சிகிச்சை அளிக்கத் தனியாக ஒரு முறை இல்லை.

ஆந்திர மருத்துவர்
இதனிடையே ஆந்திராவில் ஒருவர் ஓமிக்ரானுக்கு நாட்டு மருந்துகளைக் கொண்டு மூலிகை மருந்தைத் தயார் செய்து கொடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த போனிகி ஆனந்தய்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா உச்சத்தில் இருந்தே போதே இவர் தனது ஆயுர்வேத மருந்தைத் தயார் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

குவியத் தொடங்கினர்
மோசமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருக்கு கூட தனது நாட்டு மருந்துகள் மூலம் வெறும் 30 நிமிடத்தில் குணப்படுத்த முடியும் என்று இவர் கூறினார். இந்நிலையில் தற்போது அவர் ஓமிக்ரான் பாதிப்புக்கும் தன்னிடம் நாட்டு மருந்து இருப்பதாகவும் இதன் மூலம் விரைவாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு குணமடையும் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் பலரும் மீண்டும் கிருஷ்ணாம்பட்டினம் கிராமத்தில் உள்ள அனந்தய்யா வீட்டில் குவியத் தொடங்கினர்.

போராட்டம்
இந்தச் சூழலில் அக்கிராம மக்கள் பலரும் அனந்தய்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருத்துவத் துறையினரிடம் இருந்து எவ்வித ஒப்புதலும் பெறாமல் அனந்தய்யா மருந்துகளை வழங்கி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர்கள், இப்படி ஒரே இடத்தில் அதிகப்படியான நபர்கள் கூடுவது வைரஸ் பாதிப்பை அதிகரிக்கவே செய்யும் என விமர்சித்தனர். அனந்தய்யா செயலை கண்டித்து அவரது வீட்டின் முன் கிராம மக்கள் போராட்டத்தையும் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாகக் கிராம மக்களிடம் போராட்டம் நடத்தினர். போலீசார் சமாதானம் செய்த பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சொட்டு மருந்து
கொரோனா பரவ தொடங்கிய போது இவர் அளித்த மருந்து குறித்து ஆந்திர மாநில அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் ஆயுஷ் அமைச்சகத்தின் குழு ஆய்வு செய்தது. இவர் வழங்கும் மருந்தில் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என உறுதி செய்தது. அதேநேரம் உடலில் ஆக்சிஜனை அதிகரிக்க இவர் அளித்த கண்களில் செலுத்தும் சொட்டு மருந்தை பயன்படுத்த மட்டும் ஆந்திர அரசு அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்துகள்
கொரோனா வைரசைக் குணப்படுத்த ஆனந்தய்யா பயன்படுத்தும் மருந்துகளுக்குப் பல வித கோட் நேம்களை வைத்துள்ளார். நுரையீரலில் ஏற்பட்ட நோய் பாதிப்பை கட்டப்படுத்த பி என்ற மருந்தைப் பயன்படுத்துகிறார். அதேபோல உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றுவதற்கு எஃப் என்று மருந்தையும், கல்லீரல் செயல்பாட்டிற்காக எல் என்ற மருந்தையும் சிக்கலான பாதிப்பு உடையவர்களுக்கு கே என்ற மருந்தையும் பயன்படுத்துகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications