ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அம்மா அப்பா நல்லாயிருக்கீங்களா.. பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்டேன்.. வைரலாகும் ஆந்திர என்ஜீனியரின் வீடியோ

பாக். பிடியில் உள்ள ஆந்திர இளைஞர் பெற்றோருக்கு வீடியோ அனுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அம்மா பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்டேன்.. வைரலாகும் என்ஜீனியரின் வீடியோ

    ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் உள்பட இரண்டு இந்தியர்கள் தெரியாத்தனமாக பாகிஸ்தானுக்குள் புகுந்ததால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் சோலிஸ்தான் என்ற இடத்தில் வைத்து இருவரையும் அந்நாட்டுப் படையினர் கைது செய்துள்ளனர். இருவரும் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் புகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரசாந்த் தவிர கைது செய்யப்பட்ட இன்னொருவரின் பெயர் துர்மி லால். இவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

    பிடிபட்ட இருவரில் ஒருவர் பிரசாந்த் வைந்தம். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஹைதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர் மாயமானார். அதன் பின்னர் என்ன ஆனார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.

    தேவியின் திருவிளையாடல்கள்.. சொல்ல சொல்ல.. அதிர்ந்து போன போலீஸ்.. 24 வயசிலேயே இப்படியா!தேவியின் திருவிளையாடல்கள்.. சொல்ல சொல்ல.. அதிர்ந்து போன போலீஸ்.. 24 வயசிலேயே இப்படியா!

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான் வழியாக இவர் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். பிரசாந்த் உள்பட இருவரும் பகவல்பூர் மாவட்டத்தில் உள்ள பாலைவனப் பகுதியில் வைத்து நவம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டுள்ளன.

    காதலி

    காதலி

    பாகிஸ்தான் போலீஸார் நடத்திய விசாரணையின்போது தனது காதலியை பார்ப்பதற்காக சுவிட்சர்லாந்து புறப்பட்டதாகவும், ஆனால் பாகிஸ்தானில் நுழைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் எப்படி பாகிஸ்தானுக்குள் வந்தார் என்பது குறித்து பாகிஸ்தான் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரச்சனை இருக்காது

    பிரச்சனை இருக்காது

    இதற்கிடையே, பிரசாந்த் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனது தாய், தந்தைக்கு தெலுங்கில் பேசி செய்தி அனுப்பியுள்ளார். "அம்மா, அப்பா, நல்லாருக்கீங்களா.. இப்போது என்னை கோர்ட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர். அதன் பிறகு எனக்குப் பிரச்சினை இருக்காது என்று தெரிகிறது. கோர்ட்டிலிருந்து சிறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்திய தூதரகத்திற்கும் தகவல் கொடுப்பார்கள். பிறகு நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

    வீடியோ

    நான் சிறைக்குப் போன பிறகு ஜாமீன் கோரி மனு செய்ய வேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையே கைதிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டம் உள்ளது. ஆனால் சற்று கால தாமதமாகும் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார் பிரசாந்த். பாகிஸ்தான் போலீஸாரிடம் அனுமதி பெற்று இந்த வீடியோவில் பேசியுள்ளார் பிரசாந்த்.

    ஆனால் தான் எப்படி பாகிஸ்தானுக்குள் பிரவேசித்தேன் என்பது குறித்து அதில் பிரசாந்த் விளக்கவில்லை.

    English summary
    Pakistan police arrest two Indian including andhra engineer in Bahawalpur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X