நடிகைக்கு துன்புறுத்தல்.. ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்! ஆந்திராவில் பரபரப்பு.. என்ன நடந்தது?
ஐதராபாத்: அதிகாரிகள் தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்து தன்னை துன்புறுத்தியதாக நடிகை காதம்பரி புகார் அளித்தார். இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் உயர் போலீஸ் அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளவர் நடிகை காதம்பரி ஜெத்வானி. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். மும்பையில் பிரபலமான மாடலாகவும் நடிகையும் இருந்து வரும் காதம்பரி ஜெத்வானி அளித்த புகார் ஒன்றில் ஆந்திராவில் உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-

மும்பையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராக தான் கொடுத்து இருந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் பல்வேறு பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போலீசார் தன்னை மிரட்டியதாக காதம்பரி ஜெத்வானி குற்றம் சாட்டியிருந்தார். முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் அளித்த மோசடி புகாரில் காதம்பரியை போலீசார் கைது செய்தனர்.
அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த காவல் அதிகாரி, தனக்கு கீழ் பணியாற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளிடம், நடிகையை கைது செய்யுமாறு உத்தரவிட்டு இருக்கிறார். அதிகாரிகள் தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்து தன்னை துன்புறுத்தியதாக நடிகை காதம்பரி புகார் அளித்தார். தன்னையும் தனது குடும்பத்தினரையும் சட்டவிரோதமாக தடுப்புக்காவலில் வைத்து இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெத்வானி வழக்கறிஞர் கூறுகையில், "ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வித்யாசாகர் என்பவர் நில ஆவணங்களை மோசடியாக சித்தரித்து ஜெத்வானியையும் அவரது குடும்பத்தினரையும் சிக்க வைத்ததாகவும், பல நாட்களுக்கு ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய கூட போலீசார் அவரை அனுமதிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இந்தபுகாரின் அடிப்படையில் தான், வழக்குப்பதிவு செய்த ஆந்திர போலீசார், விசாரனைக்கு பிறகு உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. இது தொடர்பாக ஆந்திர அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- முன்னாள் உளவுத்துறை தலைவர் பி சீதாராம் ஆஞ்சநேயலு (டிஜி ரேங்க்), முன்னாள் விஜயவாடா காவல் ஆணையர் கந்தி ராணா டாடா (ஐஜி ரேங்க்) முன்னாள் துணை காவல் ஆணையர் விஷால் குன்னி (எஸ்பி ரேங்க் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள மூன்று அதிகாரிகளும் பதவியில் இல்லாமல் தினமும் இருமுறை டிஜிபி அலுவலகத்தில் வந்து வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் உயர் போலீஸ் அதிகாரிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications