நள்ளிரவில் போலீஸ் குடியிருப்பில் அலறல்.. பெண் காவலரை பலாத்காரம் செய்த எஸ்ஐ.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் போலீஸ் குடியிருப்புக்குள் வேகமாக போன எஸ்ஐ பவானிசென், பெண் போலீஸ் வீட்டிற்குள் சபலத்தில் நுழைந்தவர்.. செய்த காரியத்தால் நடுங்கி போயிருக்கிறது போலீஸ் குவாட்டர்ஸ். சம்பந்தபட்ட எஸ்ஐ டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் சில சமயங்களில் சக காவலர்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது நடக்கிறது. இரவு நேர வேலை, விடுமுறை தராமல் பணி, மனஅழுத்தம் தருவது போன்ற சம்பவங்கள் எங்காவது பெண் போலீஸ் எதிர்கொண்டுதான் வருகிறார்கள்.

Telanagana Hyderabad police

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பெண் போலீஸை, போலீஸ் குவாட்டர்ஸ்க்குள் புகுந்து எஸ்ஐ ஒருவரே வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எஸ்ஐ டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவையே அதிர வைத்த இந்த சம்பவம் பற்றி பார்ப்போம் .

தெலுங்கானா மாநிலம் பூபாலப்பள்ளி மாவட்டம் காலேஸ்வரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பவானிசென்(48) என்பவர் பணிபுரிந்து வருகிறார். சப் இன்ஸ்பெக்டர் பவானிசென்னுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் காலேஸ்வரம் லட்சுமி பம்ப்ஹவுஸ் பகுதி அருகே உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அதே குடியிருப்பில் பெண் தலைமை காவலர் ஒருவரும் வசித்து வருகிறார். இவருக்கும் திருமணமாகி கணவர், குழந்தைகள் இருக்கிறார். இந்நிலையில் பெண் தலைமை காவலர் மீது சப் இன்ஸ்பெக்டர் பவானிசென்க்கு சபலம் இருந்துள்ளது. அவருடன் நெருங்கி பழக முயற்சி செய்து வந்துள்ளார்.

ஆனால் அந்த பெண் தலைமை காவலர் இதை ஏற்காமல் விலகியே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 15ம் தேதி பணி முடித்து தனது குடியிருப்புக்கு எஸ்ஐ பவானிசென் திரும்பி உள்ளார். அன்று நள்ளிரவு பெண் தலைமை காவலரும் பணி முடிந்து தனது குடியிருப்புக்கு வந்திருக்கிறார்.

பெண் காவலர் தனியாக சென்று வீட்டிற்குள் போக இருப்பதை நோட்டம் விட்ட எஸ்ஐ, திடீரென பெண் தலைமை காவலரின் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு பெண் காவலரை தவிர வீட்டில் யாரும் இல்லை.. அங்கு கதவை பூட்டிவிட்டு பெண் தலைமை காவலரை கட்டிப்பிடித்து அத்துமீற முயன்றுள்ளாராம். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் தலைமை காவலர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

ஆனால் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி கூச்சலிட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டி பெண் தலைமை காவலரை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திருக்கு வந்துள்ள நிலையில சம்பந்தபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பாவனிசென்னை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து எஸ்ஐயை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி கரீம்நகர் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் பவானிசென், கடந்த 2022ம் ஆண்டு ஆசிபாபாத் மாவட்டத்தில் பணிபுரிந்தபோது அங்கிருந்த ஒரு பெண்ணையும் பலாத்காரம் செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 5 ஆண்டுகளில் அவர் மீது 3 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் இருந்தது. இதையடுத்த பவானிசென்னை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து ஐ.ஜி. அதிரடியாக உத்தரவிட்டார். தெலுங்கானா மாநிலத்தில் பெண் போலீஸை, போலீஸ் குவாட்டர்ஸ்க்குள் புகுந்து எஸ்ஐ ஒருவரே வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+