Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேல் பிரதமர் ‘பிசாசு’.. காசாவுக்கு ஆதரவாக மோடி நிற்க வேண்டும்.. ஓவைசி சொல்வது இதுதான்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நான் நிற்கிறேன் எனவும் பிரதமர் மோடியும் காசா மக்களுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதோடு உதவ முன்வர வேண்டும் என்று ஐதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி திடீர் தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காஸா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 Asaduddin Owaisi urge PM Narendra Modi to show solidarity with the people of Gaza

இஸ்ரேலில் 1,300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் 2,200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். தரைவழி தாக்குதலை தொடர இருப்பதால் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கெடு விதித்தது.

அசாதுதீன் ஓவைசி: தற்போது முப்படைகளின் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. எந்த நேரமும் இஸ்ரேல் ராணுவம் காசாவிற்குள் தரைவழி தாக்குதலை தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக எல்லை பகுதியில் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை இஸ்ரேல் நிலை நிறுத்தியுள்ளது. போரின் தீவிரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போரில் இந்தியா, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதேவேளையில், சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய ஆதரவு தெரிவிப்பதாகவும் இந்தியா கூறியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா நிற்க வேண்டும் என்று ஓவைசி வலியுறுத்துள்ளார். ஐதாரபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட்டு பேசிய அசாதுதீன் ஓவைசி கூறியதாவது:-

காசாவுக்கு ஆதரவாக இருங்க: இஸ்ரேல் - ஹமாஸ் இடயேயான போரில் காசா மக்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்க வேண்டும். பிரதமர் மோடி, காசாவுக்கு உதவியையும் செய்ய வேண்டும். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நான் நிற்கிறேன். தொடர்ந்து நிற்பேன். தொடர்ந்து சண்டையிட்டு கொண்டு இருக்கும் தீரம் மிக்க காசாவினருக்கு லட்சக்கணக்கான சல்யூட்கள். பெஞ்சமின் நேதன் யாகு ஒரு டெவில். போர்க்குற்றவாளி.

நமது நாட்டில் உள்ள முதல்வர் ஒருவர் சொல்கிறார் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று.. எனவே, இதை கொஞ்சம் கேட்டுக்கொள்ளுங்கள்... பாலஸ்தீனம் கொடியை நான் பெருமையுடன் அணிவேன். நமது மூவர்ணக்கொடியையும் அணிவேன். நான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளர்.

தனி பாலஸ்தீன நாடு: முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பாலஸ்தீனம் பற்றி இந்தியா கூறியிருந்ததாவது, பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறாது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பாதுகாப்பு, அமைதி ஏற்பட வேண்டும். இரண்டு நாடுகளும் சுதந்திரமாக வாழ்வதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+