ரிசல்ட் வந்த கையோடு.. ஆளுநரை சந்தித்த காங்கிரசின் ரேவந்த் ரெட்டி.. கூட போனது யாருன்னு பார்த்தீங்களா?

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி வென்றுள்ள நிலையில், அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

4 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் ராஜஸ்தான், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் காங்கிரஸ் வென்றது. தெலுங்கானாவில் உள்ள மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க 60 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

assembly-election-win-congress-revanth-reddy-meets-governor-stake-claim-to-form-govt-in-telangana

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கணித்தபடியே தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உடனேயே அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ரேவந்த் ரெட்டியுடன் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரும் உடன் சென்றார்.

டிகே சிவக்குமார் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிகே சிவக்குமார், ஆளுநர் தமிழிசையை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம். புதிய சட்டமன்றத்தில் எங்களுக்கு 65 உறுப்பினர்கள் உள்ளனர். நாளை காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது" என்றார்.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்று இரவே காங்கிரஸ் கட்சி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை காங்கிரஸ் வென்றுள்ள போதிலும் குதிரை பேரம் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக காங்கிரஸ் படுவேகமாக ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்க வாய்ப்புள்ளது. 4 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடவு ஏற்பட்டது. தெலுங்கானாவில் மட்டுமே அக்கட்சியால் ஆட்சியை பிடிக்க முடிந்துள்ளது. ஏனைய மாநிலங்களில் பாஜக வென்று ஆட்சியை பிடித்துள்ளது. அதிலும் மத்திய பிரதேசத்த்தில் அசுரத்தனமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 160 இடங்கலில் பாஜக வென்றுள்ளது. இத்தனைக்கும் அங்கு பாஜகதான் ஆளும் கட்சியாக இருந்தது கவனிக்கத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+