ஏ.ஆர். ரஹ்மானா?.. 10 ஆண்டுக்கு ஒரு ஹிட் குடுப்பாரே அவரா!.. நாக்கு தெல்லீது.. பாலகிருஷ்ணா ஓவர் பேச்சு
ஹைதராபாத்: 10 ஆண்டுகளுக்கு ஒரு ஹிட் சாங் கொடுப்பவர் ஏ.ஆர். ரஹ்மான் என தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மிகவும் ஓவராக பேசியுள்ளார்.
Recommended Video
ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஜெய் ஹோ பாடலுக்காக மிக உயர்ந்த விருதான ஆஸ்கர் விருதை பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தார்.
உலகமே அறிந்த ஆஸ்கர் நாயகனை தனக்கு யாரென்றே தெரியாது என தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறியிருப்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி சேனல்
தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு பாலகிருஷ்ணா நேற்று முன் தினம் பேட்டி அளித்திருந்தார். அதில் திரைப்படங்களில் வரும் இசை குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு பாணி உள்ளது. நிறைய பேர் இசையமைக்கிறார்கள்.

10 ஆண்டுகள்
ஏ.ஆர். ரஹ்மான் என்று ஒருவர் இருக்கிறார். அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. நான் கவனித்ததில்லை. 10 ஆண்டுக்கு ஒரு ஹிட் பாடல் கொடுப்பார். ஆஸ்கர் வாங்கியிருக்கிறார் என சொல்கிறார்கள். அதெல்லாம் எனக்கு முக்கியமே கிடையாது.

என்டிஆரின் செருப்புக்கு சமம்
அதனால்தான் பாரத ரத்னா விருதெல்லாம் என்டிஆரின் செருப்புக்குச் சமம், கால் விரல் நகத்துக்குச் சமம் என்று நான் சொன்னேன். அந்த விருதைக் கொடுத்தால் அது அவர்களுக்குப் பெருமை. விருதுக்குப் பெருமை. அவருக்கு என்ன பெருமை. என் தந்தை என்டி ராமாராவ் அதையெல்லாம் தாண்டி உயர்ந்தவர் என்றார்.

தமிழ்+ தெலுங்கு ரசிகர்கள் ட்ரோல்
பாலகிருஷ்ணாவை தமிழ் ரசிகர்கள் தாண்டி தெலுங்கு ரசிகர்களும் ட்ரோல் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு கலைஞர்களும் ஒவ்வொரு விருதை பெற கடினமாக உழைத்துள்ளனர். இவ்வாறு ஏளனமாக பேசுவது அவர்களது உழைப்பை கேலி செய்யும் செயல் என ட்ரோல் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications