101 கிரிமினல், 18 மதமோதல் கேஸ்கள்.. தெலுங்கானா பாஜக எம்எல்ஏ. ராஜாசிங்கை விடுவிக்க தமிழிசைக்கு மனு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நபிகள் நாயகம் சர்ச்சையில் சிக்கி சிறையில் இருப்பவர் தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங். இவரை விடுதலை செய்ய கோரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் மனைவி உஷா நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ராஜாசிங், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதனைக் கண்டித்து ஹைதராபாத்தில் போராட்டம் வெடித்தது. இதனால் ராஜாசிங் கைது செய்யப்பட்டார். ஆனால் உடனே ஜாமீனில் விடுதலையானார். இதற்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்ததால் இரண்டே நாளில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ராஜாசிங்.

BJP MLA Raja Singh wife meets Telangana governor Tamilisai Soundararajan

நபிகள் நாயகம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா இழிவாக பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால் பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையாகவும் உருவெடுத்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளும் நுபுர் சர்மாவை கடுமையாக கண்டித்திருந்தனர். இதனால் ராஜாசிங் விவகாரம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ராஜாசிங்கின் மனைவி உஷா பாய், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கணவர் ராஜாசிங் மீது போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உஷா பாய் மனு கொடுத்தார். மேலும் ராஜாசிங்கை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜாசிங் மனைவி உஷா பாய் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இச்சந்திப்பு தற்போது சர்ச்சையாகி உள்ளது. ராஜாசிங் மீது ஏற்கனவே 101 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன் மதமோதல்களை தூண்டிவிட்டதாக 18 வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. இப்படியான ஒருநபரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்தவர்களை தமிழிசை சவுந்தரராஜன் எப்படி சந்திக்கலாம் என்பதுதான் சர்ச்சை. ஹைதராபாத்: நபிகள் நாயகம் சர்ச்சையில் சிக்கி சிறையில் இருப்பவர் தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ. ராஜாசிங். இவரை விடுதலை செய்ய கோரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் மனைவி உஷா நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ராஜாசிங், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதனைக் கண்டித்து ஹைதராபாத்தில் போராட்டம் வெடித்தது. இதனால் ராஜாசிங் கைது செய்யப்பட்டார். ஆனால் உடனே ஜாமீனில் விடுதலையானார். இதற்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்ததால் இரண்டே நாளில் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ராஜாசிங்.

நபிகள் நாயகம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா இழிவாக பேசியதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால் பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையாகவும் உருவெடுத்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகளும் நுபுர் சர்மாவை கடுமையாக கண்டித்திருந்தனர். இதனால் ராஜாசிங் விவகாரம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ராஜாசிங்கின் மனைவி உஷா பாய், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கணவர் ராஜாசிங் மீது போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உஷா பாய் மனு கொடுத்தார். மேலும் ராஜாசிங்கை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராஜாசிங் மனைவி உஷா பாய் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இச்சந்திப்பு தற்போது சர்ச்சையாகி உள்ளது. ராஜாசிங் மீது ஏற்கனவே 101 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன் மதமோதல்களை தூண்டிவிட்டதாக 18 வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன. இப்படியான ஒருநபரை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்தவர்களை தமிழிசை சவுந்தரராஜன் எப்படி சந்திக்கலாம் என்பதுதான் சர்ச்சை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+