பாஜகவா? டி ஆர் எஸ் ஆ?.. விறுவிறுப்பாக நடைபெறும் தெலுங்கானாவின் முனுகோடு இடைத்தேர்தல்!
ஹைதராபாத்: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தெலுங்கானா மாநிலம் முனுகோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
தெலங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார்.
இதில் மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டம் முனுகோடு சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டிரெட்டி ராஜ்கோபாலரெட்டி வெற்றி பெற்றிருந்தார்.

இடைத்தேர்தல்
ஆனால் திடீரென அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்துகொண்டார். இதனால் தற்போது முனுகோடு சட்டசபை தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று நடக்கிறது. இதில் தெலுங்கானா மாநிலம் மட்டும் இன்றி மகாராஷ்டிராவின் அந்தேரி கிழக்கு தொகுதி, ஹரியாணாவின் ஆதம்பூா் தொகுதி, பீகார் மாநிலத்தில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் கோலா கோரக்பூா் தொகுதியிலும், ஒடிசாவில் தாம்நகா் தொகுதிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

தெலுங்கானாவின் முனுகோடு
அதன்படி இன்று காலை 7 மணிக்கு மேற்கண்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. தெலுங்கானாவின் முனுகோடு தொகுதியில் ஆளும் கட்சியின் டி ஆர் எஸ் சார்பில் கே.பிரபாகா் ரெட்டியும், பாஜக சார்பில் ராஜகோபால் ரெட்டியும் காங்கிரஸ் சார்பில் பல்வய் ஸ்ரவந்தியும் போட்டியிடுகின்றனர். மொத்தம் அந்த தொகுதியில் 47 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் பாஜக மற்றும் ஆளும் டி ஆர் எஸ் கட்சிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு மாநில சட்டசபை தேர்தல்
சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தனது டி ஆர் எஸ் கட்சியை தேசியளவில் கொண்டு செல்லும் முயற்சியாக பிஆர்எஸ் பாரத் ராஷ்டிரிய சமிதி என கட்சி பெயரை மாற்றியிருக்கிறார். அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்பதால் பாஜகவும் சந்திரசேகராவின் டி அர் எஸ் கட்சியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

பலத்த போட்டி
இதேபோல் அடுத்த முறை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வரவிடாமல் தடுக்க தேசிய அளவில் 3-வது அணியை உருவாக்கும் நிதிஷ் குமார் உள்ளிட்ட அரசியில் கட்சியினர்களில் இவரும் ஒருவராக இருந்தார். இதனால் தற்போது தெலுங்கானாவில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தலில் பாஜகவுக்கும், சந்திரசேகர ராவின் டி ஆர் எஸ்சுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

பாஜகவின் திட்டம்
எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முழுவீச்சில் டிஆர்எஸ் பாஜகவின் குறைகளை எடுத்துக்கூறி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது. துபக் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் முனுகோடு தொகுதியில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக நம்புகிறது. அதேசமயம் இந்த இடைத்தேர்தலில் வெற்றியை பெற்று பாஜகவுக்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என்று டி ஆர் எஸ் நினைக்கிறது. எனினும் இந்த தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும் இரண்டாவது இடம் பிடித்தால் கூட போதும் என்றும்.. அடுத்த ஆண்டு நடக்கிற சட்டமன்ற தேர்தலில் பெரிய இடம் பிடிச்சிரலாம் என பாஜக நம்புகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications