ஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் மொத்தமாக எரிக்கப்பட்ட 50 கொரோனா நோயாளிகளின் உடல்கள்.. அதிர்ச்சி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 50 பேரின் உடல்கள் மொத்தமாக எரிக்கப்பட்டது. இந்த வீடியோவை பார்த்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் ஹைதரபாத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது.

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் தற்போது 1500ஐ கடந்து வருகிறது. இதுவரை தெலுங்கானாவில் கொரோனாவால் 50826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 447 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் இறந்த 50 பேரின் உடல்கள் மொத்தமாக ஹைதரபாத்தில் உள்ள எர்ரகடா மயானத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. போக்குவரத்து பற்றாக்குறை மற்றும் ஆட்கள் பற்றாக்குறை பிரச்சனை காரணமாக கொரோனா நோயாளிகளின் உடல்கள் ஒரே நேரத்தில் தீ வைத்து எரித்து தகனம் செய்யப்பட்டன. எர்ரகடா மயானத்தில் எரிந்த உடல்களின் வீடியோ அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்து பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இதனிடையே கொரோனாவால் 50 பேர் இறந்தது ஒரேநாளில் அல்ல என்றும் இவர்கள் இறந்து மூன்று நாட்களுக்க மேல் ஆகிவிட்டது என்றும், தெலுங்கானா சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications